search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் அடித்துக்கொலை- 2 பேர் கைது
    X

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் அடித்துக்கொலை- 2 பேர் கைது

    • புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எல்க்ட்ரீசியன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • கைதான விக்ரம், மோகன்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சி பூமிநாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 26). எலக்ட்ரீசியன் . இவர் வீடுகளுக்கு ஓயரிங் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் முன்பு ரேடியோ செட் ஒலிபெருக்கி அமைத்து பாடல் ஒலிபரப்பு செய்து, மதுபோதையில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டாசு வெடித்தும் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர்.

    அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு வந்தனர். நள்ளிரவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். ஒலிபெருக்கி மூலம் சத்தம் அதிகமாக வைப்பதால் வீட்டில் இருக்கும் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு அசவுகரியாக இருக்கும். எனவே அமைதியாக கொண்டாடுங்கள் என சொல்லி விட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    போலீசார், சென்றதும் சிறிது நேரத்திலேயே மீண்டும் ஸ்பீக்கரில் சத்தம் அதிகமாக வைத்து சினிமா பாடல் ஒலிப்பரப்பு செய்து மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் அங்கு வந்து, ஸ்பீக்கர், ரேடியோ செட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு ஏராளமான மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நள்ளிரவில் அவர்கள் மது போதையில் பைக்ரேஷிசில் ஈடுபடக்கூடும் என கருதி சந்தேகத்தின் அடிப்படையில் மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதில் ஸ்ரீதர் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசார், அங்கிருந்து சென்றதும் இது தொடர்பாக ஸ்ரீதர் தரப்பினருக்கும், அய்யம்பெரும்மாம்பட்டி, பழையூர் பகுதியை சேர்ந்த ராமன் மகன் விக்ரம் (26) தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது விக்ரம் தரப்பினர் சுற்றி வளைத்து ஸ்ரீதரை தாக்கினர். மேலும் விக்ரம் நண்பர் செட்டு மகன் மோகன்குமார் (23) என்பவர் கீழே கிடந்த கட்டையை எடுத்து ஸ்ரீதர் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் ஸ்ரீதர் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ஊர்மக்கள் அங்கு கூடி சண்டையை விலக்கி விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஸ்ரீதரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, விக்ரம், மோகன்குமார் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே தலையில் பலமாக தாக்கியதால் ஸ்ரீதருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து கைதான விக்ரம், மோகன்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், லிப்தீஷ், மற்றொரு கார்த்திக், கோகுல் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எல்க்ட்ரீசியன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×