search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படும்- நயினார் நாகேந்திரன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படும்- நயினார் நாகேந்திரன்

    • தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

    பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்குவதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.

    அடுத்த முதலமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம்.

    நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நடிகர் விஜயை பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×