என் மலர்
உள்ளூர் செய்திகள்

டி.எம்.ஐ கல்லூரி 14 வது ஆண்டு விழா- மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் வசந்த் பரிசுகளை வழங்கினார்.
- நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பங்குதந்தை யேசுதாஸ், டி. எம். ஐ. மேனேஜிங் டிரஸ்டி அருட் சகோதரர் ஞானசெல்வம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் உள்ள டி.எம்.ஐ கல்லூரியின் 14 வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- டி.எம்.ஐ கல்லூரி 14 வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அங்கு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினேன்.
இந்த நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பங்குதந்தை யேசுதாஸ், டி. எம். ஐ. மேனேஜிங் டிரஸ்டி அருட் சகோதரர் ஞானசெல்வம், செயின்ட் சேவியர் அருட் சகோதரி சந்தியாகு மேரி, கல்லூரி முதல்வர் பாபு ஆதர்சன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரெகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story