என் மலர்
உள்ளூர் செய்திகள்

டீக்கடையில் கொள்ளையடித்த சென்னை வாலிபர்-சிறுவன் கைது
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
- சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சரவணனை திருவள்ளூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை கிராமத்தில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்து 400 கொள்ளை போனது.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் டீக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டது, சென்னை, அயனாவரத்தை சேர்ந்த சரவணன் (வயது18) மற்றும் இவனது நண்பரான 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சரவணனை திருவள்ளூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
Next Story






