என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு

    செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை சோதனை

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன்அடிப்படையில் அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ பரிசோதனையில் அவருடைய ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

    Live Updates

    • 15 Jun 2023 11:38 AM IST

      மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர் கண்ணதாசன், மனித உரிமை மீறல் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரித்தார். அப்போது விசாரணையின்போது கையை பிடித்து இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார் என்றார். மேலும், தலையில் காயம்  ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

    • 15 Jun 2023 11:34 AM IST

      நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நீக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

    • 15 Jun 2023 9:29 AM IST

      புழல் ஜெயிலில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது

    • 15 Jun 2023 9:28 AM IST

      இருதய ரத்த நாளங்களில் வலது புறம் 90 சதவீத அடைப்பு. இடது புறம் 80 சதவீத அடைப்பு. 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் ஸ்டண்ட் பொருத்துவதற்கு பதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை

    • 15 Jun 2023 9:24 AM IST

      அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் இருப்பதாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல்

    • 14 Jun 2023 6:42 PM IST

      ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட நடவடிக்கைகள் வாயிலாக, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம் என தெரிகிறது.

    • 14 Jun 2023 6:40 PM IST

      அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

      கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டன. கைது செய்யப்படுவோம் என தெரிந்தே செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்துவிட்டார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

    • 14 Jun 2023 5:08 PM IST

      செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில், அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் மெமோவை பெற மறுத்துவிட்டதாகவும் அமலாக்கத்துறை கூறி உள்ளது.

    • 14 Jun 2023 4:14 PM IST

      செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

    • 14 Jun 2023 4:11 PM IST

      செந்தில் பாலாஜி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×