என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன்அடிப்படையில் அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருடைய ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
Live Updates
- 14 Jun 2023 4:06 PM IST
செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
- 14 Jun 2023 3:44 PM IST
செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தல்
- 14 Jun 2023 3:41 PM IST
அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வந்தார். நீதிபதி வருகையைத் தொடர்ந்து திமுக வழக்கறிஞர்களும் வந்தனர். செந்தில் பாலாஜியின் சிகிச்சை தொடர்பான விவரங்களை நீதிபதி கேட்டறிகிறார்.
- 14 Jun 2023 2:23 PM IST
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க இருந்தது. இந்நிலையில் சக்திவேல் நீதிபதி விலகியுள்ளார்.
- 14 Jun 2023 2:14 PM IST
செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல்
- 14 Jun 2023 2:13 PM IST
செந்தில் பாலாஜி உதவியாளர் கோகுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளுக்கு சீல் வைப்பு
- 14 Jun 2023 2:12 PM IST
இ.எஸ்.ஐ. மருத்துவக்குழு ஓமந்தூரார் மருத்துவமனை சென்று ஆய்வு செய்தது. மருத்துவக்குழு அறிக்கை இ.எஸ்.ஐ, முதல்வருக்கு அளிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
- 14 Jun 2023 2:11 PM IST
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்






