search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெடி பொருட்களுடன் சுற்றியதொழிலாளி கைது
    X

    வெடி பொருட்களுடன் சுற்றியதொழிலாளி கைது

    • சுவர்களை வெடி வைத்து தகர்ப்பதற்காக வைத்து இருந்ததாக தெரிவித்தனர்.
    • போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவில்பாளையம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு தலைமையில் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் வைத்து இருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் 2, வெடிக்க பயன்படுத்தும் சல்பர் பவுடர் 250 கிராம் மற்றும் ஒரு கத்தி ஆகியவை இருந்தது.

    இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தேவ னாம்பா ளையம் அருகே உள்ள ஐஸ் கம்பெனியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் (வயது 38) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தொழி லாளியிடம் வெடி பொருட்கள் மற்றும் கத்தியை வைத்து இருந்தது குறித்து விசாரணை நடத்தினர். அதற்கு மணிகண்டன் கட்டிட மேஸ்திரியான நீலகிரி மாவட்டம் வெலிங்டனை சேர்ந்த ஆறுமுகம் (54) என்பவர் கொடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் நடத்திய விசாரணையில் சுவர்களை வெடி வைத்து தகர்ப்பதற்காக வைத்து இருந்ததாக தெரிவித்தனர்.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×