search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு
    X

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு

    • கடந்த 23-ந் தேதி கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு தொடங்கியது.
    • ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மொத்தம் 6 வனச்சரகங்கள் உள்ளன.

    பொள்ளாச்சி,

    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. பதிவு செய்தவைகளை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனக்கோட்டம், உடுமலை வனக்கோட்டம் என இரண்டு கோட்டங்களிலும் மொத்தம் 6 வனச்சரகங்கள் உள்ளன.

    இங்கு சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டு பன்றி உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி கோட்ட வனப்பகுதிற்குட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குளிர் கால வனவிலங்கு கணக்கெடுப்பு நடந்தது. அந்த நேரத்தில் புலிகள் கணக்கெடுப்பு மட்டுமின்றி, கண்ணில் தென்பட்ட விலங்குகளின் கணக்கெடுப்பும் நடந்தது.

    அதன்பின், இந்தாண்டில் நடப்பு மாதத்தில் இரண்டு வாரத்துக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 23-ந் தேதி கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு தொடங்கியது. ரோந்து சென்ற பகுதி மற்றும் நேர்கோடு பகுதிகளிலும் இப்பணி நடைபெற்றது.

    பொள்ளாச்சி வனக்கோட்டத்தில பொள்ளாச்சி வனத்தில் வனச்சரகர் புகழேந்தி முன்னிலையிலும், டாப்சிலிப் வனத்தில் வனச்சரகர் சுந்தரவேல் முன்னிலையிலும் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பில், வனக்காப்பாளர், வேட்டைத்தடுப்பு காவலர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலர் தனித்தனி குழுவாக கலந்து கொண்ட னர்.

    அவர்கள் திசைகாட்டும் கருவி, நிலைமானி, தூரம் அளக்கும் கருவி கயிறு உள்ளிட்டவைகள் பயன்பாட்டுக்கு வைத்திருந்தனர். வனவிலங்கு கணக்கெடுப்பின் போது யானை மற்றும் கடமான்கள் அதிகம் கண்ணில் தென்பட்டுள்ளது. டாப்சிலிப், போத்தமடை உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் கால் தடயம், எச்சம் இருந்துள்ளது.

    வனவிலங்கு கணக்கெடுப்பை, இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்தனர்.கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து விலங்குகளின் கால்தடயம், முடி உதிர்தல், எச்சம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தும் பணி நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×