search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கோடை விழா பணிகள்மேயர் சுந்தரி ராஜா ஆய்வு
    X

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மேயர் சுந்தரி ராஜா பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கோடை விழா பணிகள்மேயர் சுந்தரி ராஜா ஆய்வு

    • கோடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நெய்தல் கொடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரங்குகள் அமைப்பு, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான குடிநீர், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், கோடை விழாவை குடும்பத்துடன் வந்து கண்டுக்களிக்க அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி , மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா , சங்கீதா, கவுன்சிலர்கள் ஆராமுது , சுபாஷ்ணி ராஜா, பார்வதி, சுதா, செந்தில்குமாரி, சசிகலா ஜெயசீலன், பகுதி துணை செயலாளர் லெனின், கார் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×