search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டியில் பஸ்கள் நிற்பதில்லை என புகார் சூலூரில் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை
    X

    கருமத்தம்பட்டியில் பஸ்கள் நிற்பதில்லை என புகார் சூலூரில் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை

    • 25 வருடங்களுக்கு முன்பாக பஸ்களுக்கு வழித்தட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
    • புகார் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நிறுத்துவதில்லை என பொதுமக்கள் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையம், சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் கோவை தெற்கு ஆர்.டி.ஓ பாலமுருகன், சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகசுந்தரம், கோவை தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முகவேல் மற்றும் தனசேகரன் முன்னிலை வகித்தனர்.

    இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், பா.ஜனதா கட்சியினர், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அப்போது பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பேசும் போது,25 வருடங்களுக்கு முன்பாக பஸ்களுக்கு வழித்தட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    அப்போது நெருக்கடி அற்ற போக்குவரத்து இருந்தது. தற்போது மிகவும் நெருக்கடியாக அதிக அளவில் போக்குவரத்து உள்ளது.இதனையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

    அதற்கு கோவை தெற்கு ஆர்.டி.ஓ, இனி வரும் காலங்களில் பொது–மக்களு–க்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

    அப்போது பஸ் உரிமையாளர்கள் சங்க கோவை தலைவர் மணி கூறியதாவது:-

    இனி வரும் கா லங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களி–டம் கருமத்தம்பட்டி நிறுத்தம் பற்றி அறிவுறுத்தப்படும்.

    மேலும் இது சம்பந்தமாக பஸ்களில், அவிநாசி மற்றும் கருமத்தம்பட்டி நிறுத்தம் பற்றி எழுதப்படும். மேலும் கருமத்தம்பட்டியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்களிடம் கோவை தெற்கு ஆர்டிஓ தனது செல்போன் என்னை கொடுத்து ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    இதில் பா.ஜ.கவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி தலைமையில் கருமத்தம்பட்டி மண்டல தலைவர் மோகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×