என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அப்பால ரெங்கநாதர்.
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
- மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பூதலூர்:
திருக்காட்டுபள்ளி -கல்லணை சாலையில் கோவிலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அப்பால ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் பூஜை கள் நடைபெற்றன.
மூலவ ருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவிலின் முன் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அப்பால ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
கோவிலின் ஸ்ரீ கமலவல்லி தாயார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






