search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
    X

    கோவையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

    • கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    கோவை

    கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகம் நடைபெற்றது. பின்னர் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிரதம் உள்பட 11 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முந்தி விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர். இந்த விநாயகர் 19½ அடி உயரம், 11½ அகலம், 190 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட ஆசியாவிலேயே முதல் சிலையாகும்.

    கோவை அருகேயுள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சதுர்த்தியை யொட்டி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று கோவை ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி காலை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. வடவள்ளி ஆபத்சகாய சுந்தர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

    இதேபோல், ரேஸ்கோர்ஸ் விநாயகர் கோவில், காந்திபுரம் சித்தி விநாயகர் கோவில், பேரூர் படித்துறை விநாயகர் கோவில்களிலும், நகரின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதுதவிர வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். விநாயகருக்கு பிடித்தமான கொலுக்கட்டை, சுண்டல் பொரி கடலை படைத்து வழிபட்டனர்.

    Next Story
    ×