என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்- கலெக்டர் தகவல்
- சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டம்.
- மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி முதல் கட்டமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ பிளாக் தரைத்தளத்தில் நாளை (வியாழக்கிழமை)
காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள். மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.