என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பா.ஆதித்தனார் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்- டி.டி.வி.தினகரன் புகழாரம்
    X

    சி.பா.ஆதித்தனார் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்- டி.டி.வி.தினகரன் புகழாரம்

    • தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.
    • சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எளிய மக்களுக்கான இதழியல் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்களுக்காக 'தினத்தந்தி' நாளிதழைத் தொடங்கி அதில் வெற்றி கண்ட மாமனிதர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.

    புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம்பிடித்து முடிசூடா மன்னராக திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×