என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சாக்கோட்டை அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே சாக்கோட்டை பக்கமுள்ள பீர்கலைகாடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மூத்த மகள் ராஜாத்தி (வயது29). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது

    இந்த நிலையில் மாரிமுத்துவின் நடவடிக்கையில் மாற்றம் இருந்து வந்ததால் அவருக்கு பேய்பிடித்து இருப்பதாக ராஜாத்தி கருதினார்.

    தன் கணவருக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என மனவேதனை அடைந்த ராஜாத்தி விரக்தியில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி ராஜாத்தி தீ வைத்துக் கொண்டார். படுகாயம் அடைந்த அவரை மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    மானாமதுரை அருகே உள்ள எம்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ளது எம்.கரிசல்குளம். இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 2–ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    நேற்று காலை ஏராளமான பக்தர்கள் மானாமதுரை அடுத்த பார்த்திபனூர் மதகு அணை அருகே உள்ள வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் இந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பறவை காவடி எடுத்து வர, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த முளைப்பாரி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குடி மக்கள் செய்திருந்தனர். முளைப்பாரி திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆனால் கடந்த 100 வருடமாக அமைதியாக நடந்த இந்த திருவிழாவில், இந்த ஆண்டு வெளிநபர்களால் திடீரென பிரச்சினை ஏற்பட்டது.

    அதன்பின்னர் நடந்த சமாதான கூட்டத்தில் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று கொள்ளப்பட்டதை தொடர்ந்து போலீசார் அமைதியாக விழா நடந்த அனுமதி கொடுத்த போதிலும், இரவு கலைநிகழ்ச்சிக்கு அனுமதி தரவில்லை என்று அந்தபகுதியை சேர்ந்தவர்கள் புகார் கூறினர்.
    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 45 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
    திருப்புவனம்:

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 45 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இதற்காக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுமார் 700 வாக்குப்பதிவு பெட்டிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் அனைத்து வாக்குப்பெட்டிகளையும் மராமத்து செய்து அனைத்து பெட்டிகளும் நல்ல முறையில் இயங்கும்படி தயார் செய்தனர். இந்த பணிகளை ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி பார்வையிட்டு அனைத்து பெட்டிகளையும் பழுது நீக்கி தரமாக தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    காரைக்குடியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கேலிவதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கேலிவதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி தலைமை தாங்கி கல்லூரி மாணவிகளுக்கு கேலிவதை தடுப்பு சட்டம் குறித்தும், பெண்கள் கல்லூரி வாழ்க்கை மற்றும் சமுதாய வாழ்க்கையில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் செயல்படுவது குறித்தும், பெண்களுக்கு சட்டத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளது என்றும் அதை எவ்வாறு நல்ல நோக்கத்திற்காக கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.

    இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் மணிமேகலை செய்திருந்தார்.
    காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பக்கமுள்ள கீழடியை சேர்ந்த 18 வயது இளம்பெண் மதுரையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வேல்முருகன் (வயது20). அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று தனது வீட்டின் பின் புறத்தில் துணியை காய வைக்க சென்ற இளம் பெண்ணை சந்தித்த வேல்முருகன், தன்னை காதலிக்கும்படி கூறினார். அதற்கு அப் பெண் மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கழுத்தை அறுக்க முயன்றார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்ததும் அங்கிருந்து வேல்முருகன் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த இளம் பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வருகிறார்கள்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 4 மாத குழந்தையை கொலை செய்து கிணற்றில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் உறவினர் பெண், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கல்லல்:

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள புரண்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிதந்த மூடையில் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை பிணம் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது புரண்டி கிராமத்தைச் சேர்ந்த அழகு என்பவரின் மனைவி ராசாத்தி என்ற முத்துலட்சுமி (வயது 35), அவருடைய 4 மாத ஆண் குழந்தை ஹரீஸ் என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்புச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ரமேஷ், கணபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதன்படி தனிப்படை போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். கடந்த மாதம் 14–ந்தேதி வங்கிக்கு பணம் எடுக்க சென்ற தனது மருமகளை காணவில்லை என்று அவரது மாமனார் கருப்பசாமி கல்லல் போலீசில் புகார் அளித்து இருந்தார். ஆனால், சாக்கு மூடையில் இருந்த பெண்ணின் பிணம் நைட்டி அணிந்த நிலையில் இருந்தது.

    இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அழகுவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, முத்துலட்சுமியின் கைப்பையும் வீட்டில் இருந்துள்ளது. அதில், வங்கி குறித்த ஆவணங்களும் இருந்துள்ளன. வங்கிக்கு சென்றவர் கைப்பையின்றி, நைட்டியுடன் சென்று இருக்க முடியாது. இதனால், இந்த கொலை சம்பவத்தில் அவரது வீட்டில் உள்ளவர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். அதன்பேரில், அவரது வீட்டில் உள்ள அனைவரிடமும் போலீசார் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் முத்துலட்சுமி அவரது குழந்தை இருவரையும், அழகுவின் தம்பி மனைவி ஜோதி (26) மற்றும் உறவினர் முருகன் (31) இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்விவரம் வருமாறு:–

    அழகுவின் தம்பி கணேசன். இவரது மனைவி ஜோதி. அழகுவும், கணேசனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், மாமனார், மாமியாருடன் மருமகள்கள் முத்துலட்சுமி, ஜோதி இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டின் அருகே உள்ள உறவினர் முருகன் என்பவருக்கும் ஜோதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால், இருவரும் தனியே அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட முத்துலட்சுமி அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் தங்களது பழக்கத்தை கைவிடவில்லை. இதனால், முருகனின் வீட்டில் தெரிவித்துவிடுவேன் என்று கூறி முத்துலட்சுமி எச்சரித்துள்ளார். இதனால், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள முத்துலட்சுமியை தீர்த்துக்கட்டுவது என்று முருகனும், ஜோதியும் முடிவு செய்துள்ளனர்.

    இந்தநிலையில், சம்பவத்தன்று முருகனின், தாயை பார்க்க அவரது வீட்டிற்கு முத்துலட்சுமி சென்றுள்ளார். அப்போது, முருகன் மட்டுமே வீட்டில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த முருகன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து ஜோதியை அங்கு வரவழைத்தார். பின்னர், இருவரும் சேர்ந்து முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அப்போது, திடீரென குழந்தை அழத்தொடங்கியதால், மாட்டிக் கொள்ளக்கூடாது என்று அவர்கள் குழந்தையையும் கொலை செய்துள்ளனர்.

    பின்னர், முருகன் அவர்கள் இருவரின் உடலையும் வீட்டின் பின் பகுதியில் மறைத்து வைத்துள்ளார். ஜோதி வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்தவர்களிடம் ஜோதி, கல்லில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க முத்துலட்சுமி சென்றுள்ளதாக தெரிவித்து நாடகமாடி உள்ளார்.

    பின்னர், நள்ளிரவு எழுந்த முருகன் முத்துலட்சுமியின் உடலை இருதுண்டுகளாக வெட்டி அதனையும், குழந்தையின் உடலையும் மூடைகளில் கட்டினார். பின்னர், அங்கிருந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டத்து கிணற்றுக்கு மோட்டார் சைக்கிளில் வைத்து மூடைகளை கொண்டு சென்று கல்லைக்கட்டி போட்டுவிட்டு வந்துள்ளார்.

    கல்லைக்கட்டி மூடையை போட்டால் யாருக்கும் தெரியாது என்று நினைத்ததாகவும், ஆனால், உடல் தண்ணீரில் உப்பி வெளியே வந்துவிட்டதால் தாங்கள் மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
    முன் விரோத மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி தந்தை பெரியார் நகர் 9-வது தெருவைச்சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சங்குபாண்டி (வயது 27). இவருக்கும் சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று பர்மா காலனி பஸ் நிறுத்தத்தில் சங்குபாண்டி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு தினகரன், ஆனந்த், ரோ‌ஷன் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் சங்கு பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மோதலாக மாற, 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் சங்கு பாண்டியை காயப்படுத்தி விட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயம் அடைந்த சங்குபாண்டி சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து தினகரன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பிளஸ்-2 மாணவி பலியானார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பனங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகள் திவ்யா (வயது17). இவர் சூசையப்பர்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    அதே ஊரைச் சேர்ந்த மதுமிதா, பிரவீனா, ஆர்த்தி, சங்கீதா, வைஷ் ணவி உள்பட 8 பேரும் சூசையப்பர்பட்டினத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். திவ்யா உள்பட 9 பேரும் ஒரு காரில் தினமும் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

    அதன்படி இன்று காலை திவ்யா உள்பட 9 மாணவிகள் காரில் பள்ளிக்கு புறப்பட்டனர். காரை கருணாகரன் என்பவர் ஓட்டினார். பனங்கரை அருகே உள்ள நடேசபுரம் பகுதியில் கார் வந்தபோது, திடீரென காரின் முன்டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கியது.

    காரில் பயணம் செய்த திவ்யா, சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். மற்ற 8 மாணவிகள், டிரைவர் கருணாகரன் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காளையார்கோவில் சந்தையில் வியாபாரிகள் மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    காளையார்கோவில்:

    காளையார்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்களின் வசதிக்காக வாரந்தோறும் திங்கட்கிழமை நாளில் சந்தை கூடுகிறது. இதில் காய்கறிகள், பழங்கள், மீன்கள் என உணவுப்பொருட்கள் வாங்க வரும் மக்களை சந்தை வியாபாரிகள் எடை குறைவாக பொருட்களை நிறுத்தி மோசடி செய்து வருகிறார்கள்.

    ஒரு கிலோவிக்கு பொருட்கள் வாங்கினால் முக்கால் கிலோதான் இருக்கிறது. சந்தை வியாபாரி ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது சந்தையை குத்தகை எடுத்தவர்கள் ஒரு மூட்டைக்கு ரூ.60 வரை வசூல் செய்கிறார்கள். சந்தைக்கு உள்பட்ட இடம் போக நடைபாதை வியாபாரிகளிடம் குத்தகைதாரர் வசூல் அதிகளவில் செய்கிறார்கள். நாங்கள் ஒரு மூட்டைக்கு ரூ.60 கொடுத்தால் எங்கள் குடும்பம் நடுத்தெருவுக்குத் தான் வரும். ஆனால் நாங்கள் நஷ்டம் ஆகாமல் இருக்க எடையில் சில குளறு படிகளை செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

    மோசடி செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    காரைக்குடியில் தியேட்டர் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜா முகம்மது (வயது64). இவரது மகன் சேக் அப்துல்லா (26). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 1½ வருடமாக தந்தை–மகனுக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று தியேட்டரில் ஆபரேட்டர் அலுவலகம் அருகில் உள்ள அறையில் சேக் அப்துல்லா தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சேக் அப்துல்லா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ராஜா முகம்மது கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து சேக் அப்துல்லா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட சேக் அப்துல்லாவுக்கு சர்மிளா பானு என்ற மனைவி உள்ளார்.

    காரைக்குடியில் அரசு அதிகாரி வீட்டில் நகை திருடிய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி முத்துப் பட்டிணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கலா (வயது56). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் அதே பகுதியில் புது வீடு கட்டி சில நாட்களுக்கு முன்பு குடிபுகுந்தார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த 10 பவுன் நகை திடீரென மாயமானது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கலா காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கலாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணன், அவரது மனைவி ராணி ஆகியோர் நகை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து 10 பவுன் நகையை மீட்டனர்.

    காரைக்குடியில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காரைக்குடி:

    காரைக்குடி சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவிதா (29) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. செல்வக்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் செல்வக் குமார் புதுவீடு கட்டி விழா நடத்த ஏற்பாடு செய்தார். அழைப்பு பத்திரிகையில் அக்காவின் பெயரை சேர்க்க வேண்டும் என்று மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் கவிதா இதற்கு மறுத்துள்ளார். இதனால் கணவன்– மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதில் விரக்தியடைந்த கவிதா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×