என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையார்கோவில் சந்தையில் வியாபாரிகள் மோசடி
    X

    காளையார்கோவில் சந்தையில் வியாபாரிகள் மோசடி

    காளையார்கோவில் சந்தையில் வியாபாரிகள் மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    காளையார்கோவில்:

    காளையார்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்களின் வசதிக்காக வாரந்தோறும் திங்கட்கிழமை நாளில் சந்தை கூடுகிறது. இதில் காய்கறிகள், பழங்கள், மீன்கள் என உணவுப்பொருட்கள் வாங்க வரும் மக்களை சந்தை வியாபாரிகள் எடை குறைவாக பொருட்களை நிறுத்தி மோசடி செய்து வருகிறார்கள்.

    ஒரு கிலோவிக்கு பொருட்கள் வாங்கினால் முக்கால் கிலோதான் இருக்கிறது. சந்தை வியாபாரி ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது சந்தையை குத்தகை எடுத்தவர்கள் ஒரு மூட்டைக்கு ரூ.60 வரை வசூல் செய்கிறார்கள். சந்தைக்கு உள்பட்ட இடம் போக நடைபாதை வியாபாரிகளிடம் குத்தகைதாரர் வசூல் அதிகளவில் செய்கிறார்கள். நாங்கள் ஒரு மூட்டைக்கு ரூ.60 கொடுத்தால் எங்கள் குடும்பம் நடுத்தெருவுக்குத் தான் வரும். ஆனால் நாங்கள் நஷ்டம் ஆகாமல் இருக்க எடையில் சில குளறு படிகளை செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

    மோசடி செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×