என் மலர்
சிவகங்கை
சிவகங்கை:
மானாமதுரை அருகே உள்ள மலைக்குளத்தை சேர்ந்தவர் ரவி (வயது25). இவரது மனைவி சண்முகப் பிரியா (வயது19). கடந்த 12-ந்தேதி உறவினர் வீட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.
ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. அதே நேரம் வீட்டிற்கும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் சண்முகப்பிரியாவை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் இருளாயி. இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வாரத்தில் இருளாயி, பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்து உறவினரை பார்த்து வருவதாக கூறி வெளியே சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து மாயமான 2 பெண்களையும் தேடி வருகிறார்.
சிவகங்கை:
காளையார்கோவில் அருகே உள்ள சாத்தாணி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய ஒரு பெண் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
காளையார்கோவில் சொர்ணவள்ளி தெருவை சேர்ந்தவர் அன்னபூர்ணம். இவரது மகள் திவ்யா (வயது21). இவர் சிவகங்கையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற திவ்யா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை:
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர் நூர்ஜகான். இவரது மகள் ஷகிலா பானு (வயது29). இவர் அதே பகுதியில் உள்ள விரவனூரை சேர்ந்த சாகுல் அமீது என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நூர்ஜகான் தனது மகளை புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று திருப்பத்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நூர்ஜகான் தனது மகளுடன் வந்தார். திருப்பத்தூர் பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப் போது அங்கு காரில் வந்த ஷாகுல் அமீது உள்ளிட்ட சிலர் ஷகிலாபானுவை கடத்தி சென்றனர்.
உடனே நூர்ஜகான் அங்குள்ள போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
மதகுபட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் மோகன் மற்றும் போலீசார் இளம்பெண் கடத்தப்பட்ட காரை மதகுபட்டி அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த ஷகிலா பானுவை மீட்டு, ஷாகுல் அமீதுவை கைது செய்தனர்.
காரைக்குடி:
காரைக்குடி மகர்நோன்பு பொட்டலை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி இந்திரா (வயது72). இவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கோவிலூர் ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கியில் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த கோட்டையூர் விநாயகர் அக்ரகாரத்தை சேர்ந்த சங்கர் (வயது42) என்பவர் இந்திராவிடம் வங்கி ஊழியர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு ரூ.5 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பினார்.
இது குறித்து போலீசில் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்திரா அதே வங்கியில் பணம் செலுத்த வந்தபோது அங்கிருந்த சங்கரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தார்.
இதேபோல் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த அனீஸ்பாத்திமா என்பவர் செக்காலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணம் செலுத்த காத்திருந்தபோது அங்கு வந்த 42 வயது மர்ம ஆசாமி ரூ.2 ஆயிரத்தை மாற்றி தருவதாக கூறி வாங்கி கொண்டு தப்பினார்.
இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் எழில்நகரை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது49). இவர் புதுவயலில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சுந்தரலிங்கம் கடைக்கு சென்றுவிட்டார்.
மதிய நேரத்தில் சுந்தர லிங்கத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த தெய்வானை என்ற பெண் அவருக்கு போனில் பேசினார். அப்போது அவர் உங்கள் வீட்டின் முன்பு ஒரு கார் நின்றுள்ளதாகவும், சில மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் போனதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக சுந்தர லிங்கம் வீட்டுக்கு புறப்பட்டார். அதற்குள் அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பினர். வீட்டில் சென்று பார்த்தபோது 5½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது.
சுந்தரலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
நேற்றும் இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 18½ பவுன் நகை, ரூ.2 லட்சத்து 20 ஆயிரம், 1 கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளை போயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதகுபட்டி அருகே உள்ள காடனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி (வயது47). இவரது மகள் தனபாக்கியம் (வயது24). இவர், கணவர் முத்துக்குமாருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர், மதகுபட்டி வரை சென்று வருவதாக உறவினர்களிடம் கூறி சென்றார். அதன் பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களிலும் தனபாக்கியத்தை தேடியும் பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மதகுபட்டி போலீசில் பார்வதி புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து மாயமான தனபாக்கியத்தை தேடி வருகிறார்.
சிவகங்கை:
பூவந்தி அருகே உள்ள அரசனூரைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 33). இவரது மகன் முருகன் (17). திருமாஞ்சோலை அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை வழக்கம் போல் முருகன் பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் முருகனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பூவந்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் முருகனை தேடி வருகிறார்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி கிராமம். இங்கு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.
இதனை இன்று தலையாரி பெரியண்ணன் திறக்க வந்தார். அப்போது அலுவலக வாசலில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது அருகே பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்தது எனவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் பிணமாக கிடந்தவர் மாற்றுத்திறனாளி ஆவார். அவர் உதவித்தொகை எதுவும் கேட்டு மனு கொடுக்க வந்தவரா? அல்லது வேறு காரணத்தால் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து ஆறாவயல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே உள்ள அழகாபுரி எழில்நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம் அருகே உள்ள ஏத்தநாடு பகுதி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.
கார்த்திகை முதல் நாளான நேற்று, மதுரை மாவட்டம் அழகர்மலையில் உள்ள அழகர்கோவிலுக்கு குடும்பத்தினருடன் புகழேந்தி சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு இரவு அவர் வீடு திரும்பினார்.
வீட்டுக்குள் நுழைந்த புகழேந்தி குடும்பத்தினர் அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
அதன்வழியாக உள்ளே நுழைந்த மர்ம மனிதர்கள், வீட்டின் பீரோவை திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து பள்ளத்தூர் போலீ சாருக்கு புகழேந்தி தகவல் கொடுத்தார். வீட்டில் இருந்த 18½ பவுன் நகைகள் 1 கிலோ வெள்ளி, ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் போன்றவை கொள்ளை போயிருப்பதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ 5 லட்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ள, அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய பாண்டியன் மற்றும் போலீ சார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
திருப்பத்தூர் தாலுகா பிரான்மலை கீழத்தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம் (70). இவர் வீட்டை பூட்டி விட்டு கடைவீதிக்கு சென்ற நேரத்தில் பின்பக்க கதவை உடைத்து மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ. 1,000 ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ. 26 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி நடராஜ புரத்தை சேர்ந்தவர் வெங் கடாசலபதி (47). தற்போது காரைக்குடியில் வசிக்கும் இவர், நேற்று சாமி கும்பிடுவதற்காக நடராஜபுரம் வந்தார். அங்குள்ள பூர்வீக வீட்டிற்கு சென்ற அவர் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 8 பவுன் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பதாக, கல்லல் போலீசில் வெங்கடாசலபதி புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஈடுபட்டது ஒரே கும்பலா? தனித்தனி நபர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கில்ஊரணி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, அரசு மருத்துவமனை ஊழியர். இவருக்கு வசந்த பிரியன் என்ற மகனும், பிரவீணா (3) என்ற மகளும் உள்ளனர்.
தனியார் பள்ளியில் படிக்கும் வசந்தபிரியன், தினமும் பள்ளி வேனில் சென்று வந்தான். இன்று (வியாழக்கிழமை) காலை வழக்கம்போல் அவன் பள்ளிக்கு புறப்பட்டான்.
அவனை வேனில் ஏற்றி விட, தாயுடன் சிறுமி பிரவீணாவும் சென்றார். மூங்கில்ஊரணி பஸ் நிறுத் தத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். பள்ளி வேன் வந்ததும், வசந்த பிரியன் அதில் ஏறினான்.
அப்போது சிறுமி பிரவீணா, வேன் படிக்கட்டு பகுதிக்கு சென்றார். இதனை டிரைவர் கவனிக்காமல் வேனை எடுக்க, பின் சக்கரத்தில் பிரவீணா சிக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக மனாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 27). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அம்பேத்கார் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது மேலபிடாவூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ராஜாவை வழிமறித்தார். அவர் நின்றதும் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிவகங்கை போலீசில் ராஜா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய பாலகிருஷ்ணன் மீது பல வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை தாலுகா கோபானூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு (வயது27). மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர், டி.புதூரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அந்த பெண் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த மாரிக்கண்ணு வீடு புகுந்து, தன்னை திருமணம் செய்யும்படி மிரட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் மாரிக்கண்ணுவை பிடித்து சிவகங்கை நகர் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆயுதப்படை போலீஸ்காரர் மாரிக்கண்ணுவை கைது செய்தார்.






