என் மலர்
செய்திகள்

பூவந்தி அருகே பிளஸ்-2 மாணவன் மாயம்
பூவந்தி அருகே பிளஸ்-2 மாணவன் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
பூவந்தி அருகே உள்ள அரசனூரைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 33). இவரது மகன் முருகன் (17). திருமாஞ்சோலை அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை வழக்கம் போல் முருகன் பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் முருகனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பூவந்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் முருகனை தேடி வருகிறார்.
Next Story






