என் மலர்
செய்திகள்

காளையார்கோவிலில் பள்ளி மாணவி- நர்சு திடீர் மாயம்
காளையார்கோவிலில் பள்ளி மாணவி-நர்சு திடீரென மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
காளையார்கோவில் அருகே உள்ள சாத்தாணி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய ஒரு பெண் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
காளையார்கோவில் சொர்ணவள்ளி தெருவை சேர்ந்தவர் அன்னபூர்ணம். இவரது மகள் திவ்யா (வயது21). இவர் சிவகங்கையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற திவ்யா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






