என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே அடகு கடை அதிபர் வீட்டில் 5½ பவுன் கொள்ளை
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் எழில்நகரை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது49). இவர் புதுவயலில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சுந்தரலிங்கம் கடைக்கு சென்றுவிட்டார்.
மதிய நேரத்தில் சுந்தர லிங்கத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த தெய்வானை என்ற பெண் அவருக்கு போனில் பேசினார். அப்போது அவர் உங்கள் வீட்டின் முன்பு ஒரு கார் நின்றுள்ளதாகவும், சில மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் போனதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக சுந்தர லிங்கம் வீட்டுக்கு புறப்பட்டார். அதற்குள் அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பினர். வீட்டில் சென்று பார்த்தபோது 5½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது.
சுந்தரலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
நேற்றும் இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 18½ பவுன் நகை, ரூ.2 லட்சத்து 20 ஆயிரம், 1 கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளை போயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






