என் மலர்
செய்திகள்

ஒருதலை காதல்: பெண்ணை மிரட்டிய மதுரை போலீஸ்காரர் கைது
ஒருதலை காதலால் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா கோபானூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு (வயது27). மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர், டி.புதூரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அந்த பெண் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த மாரிக்கண்ணு வீடு புகுந்து, தன்னை திருமணம் செய்யும்படி மிரட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் மாரிக்கண்ணுவை பிடித்து சிவகங்கை நகர் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆயுதப்படை போலீஸ்காரர் மாரிக்கண்ணுவை கைது செய்தார்.

Next Story