என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 பேர் பூரண குணமடைந்ததை தொடர்ந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்ததை தொடர்ந்து நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த வட்ட வழங்கல் அதிகாரி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் தாலுகா அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    கீழக்கரை:

    கீழக்கரையில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர கீழக்கரையை சுற்றிலும் கும்பிடு மதுரை, நத்தம், கொம்பூதி, ஏர்வாடி, மாயாகுளம், புல்லந்தை, காஞ்சிரங்குடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கீழக்கரையில் இதுவரையிலும் 90-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு அறைகளுக்கும் டி.வி. பொருத்தப்பட்டு உள்ளது. இதேபோல ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் உணவு உண்பதற்காக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கீழக்கரை பைத்துல்மால் உதவியுடன் அதன் தலைவர் சாதிக் அலி, துணை தலைவர் ஹபீபுல்லாகான் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    மதுப்பிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றதால் திருப்புவனத்தில் 4 டாஸ்மாக் கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அடைக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள புலியூர், கலியாந்தூர் சாலை, வன்னிகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் புலியூர் டாஸ்மாக் கடை மதுரை மாவட்டத்தை ஒட்டியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று புலியூர் டாஸ்மாக் கடையில் மதுவாங்க குவிந்தனர்.

    ஒரே நேரத்தில் 500-க்கு மேற்பட்டவர்கள் சமூகஇடைவெளி இல்லாமல் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் விரைந்து வந்து சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து மது விற்பனை நடைபெற்றது.

    கடந்த 3 நாட்களாக மதுப்பிரியர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுப்பிரியர்கள் திருப்புவனம் டாஸ்மாக் கடைகளில் குவிந்துவருவதால் மேலும் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து திருப்புவனம் பகுதியில் உள்ள புலியூர், கலியாந்தூர் சாலை, வன்னிகோட்டை சாலை பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை அடைக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதன்படி அதிகாரிகள் 4 டாஸ்மாக்கடைகளையும் அடைத்து சீல் வைத்தனர். இதனால் மதுவாங்க ஆவலுடன் சென்ற குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் உள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை முன்பு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவகங்கை நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் சிவகங்கை பகுதியில் 4 ஆண், 2 பெண், தேவகோட்டை பகுதியில் தலைமை காவலர், லயன்ஸ் சங்க தலைவர் உள்பட 5 பேர், 3 பெண், கள்ளிகுடியில் ஒரு ஆண், சென்னையை சேர்ந்த 2 ஆண், 2 பெண், காளையார்கோவிலில் ஒரு பெண், சிங்கம்புணரியில் ஒரு பெண், காரைக்குடியில் 3 ஆண், ஒரு பெண், திருப்புவனத்தில் ஒரு ஆண், 3 பெண், மானாமதுரையில் ஒரு ஆண், ஒரு பெண், மழவராயனேந்தலில் ஒரு ஆண், திருப்பத்தூரில் ஒரு ஆண், ஒரு பெண் உள்பட 33 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று 29 பேர் பூரண குணமடைந்தனர். அவர் களை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
    சிவகங்கை மாவட்டம் கீழடியில் பலத்த மழையால் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. இதில் பானைகள், செங்கல் கட்டிட சுவர் பகுதிகள், விலங்கின எலும்பு கூடு, மண் உலை, முதுமக்கள் தாழிகள், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள், சிறிய பானைகள், நத்தை ஓடு, தங்க நாணயம், சங்கு வளையல்கள், மணிகள், பாசிகள், அம்மி அரவை கல் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி, பெரிய, சிறிய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதியில் ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அந்த குழிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி குழிகளை தார்ப்பாய்கள் கொண்டு மூடி வைத்தனர். மழையால் அகழாய்வு பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று சிவகங்கை பகுதியை சேர்ந்த 3 ஆண் மற்றும் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 3 ஆண், 3 பெண்கள், டி.ஆலங்குளத்தை சேர்ந்த ஒரு ஆண், காரைக்குடி, ராமநாதபுரத்தை சேர்ந்த தலா ஒருவர், திருப்புவனத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பை தொடர்ந்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது. போலீஸ் நிலையத்திலும், காவலர் குடியிருப்பு பகுதியிலும் கிருமிநாசினி தெளித்து பேரூராட்சி பணியாளர்கள் சுகாதார நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்ததையடுத்து நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன் மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். 
    கீழடியில் ஒரு குழியில் ஏற்கனவே பானைகள், வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று அதே குழியில் தரைத்தளம் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 6-ம்கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் கீழடியில் நேற்று ஒரு குழியில் புதிய தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடியில் ஒரு குழியில் ஏற்கனவே பானைகள், வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று அதே குழியில் தரைத்தளம் போன்ற அமைப்பு நீண்டு கொண்டே செல்கிறது.

    இந்த தரைத்தளம் பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முழுமையான ஆய்வுக்குபின் இது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற முழுவிவரம் தெரியும் என்று அதிகாரிகள் தெவித்தனர். 
    மதுரையில் பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது.
    சிவகங்கை:

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி இந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதில் மருத்துவ பணிகள், மருந்தகங்கள் ஆகியவற்றிற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. இறைச்சி, கோழி மற்றும் மீன் மொத்த விற்பனை கூடங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

    மதுரையில் பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது.

    மதுரையை சேர்ந்தவர்கள் புலியூருக்கு சென்று மதுவாங்கி வருகின்றனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அச்சத்தில் புலியூர் மக்கள் உள்ளனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மானாமதுரையில் ஒரு ஆண், பெரியகோட்டையில் 2 பெண்கள், சிவகங்கையில் ஒரு பெண், மானாமதுரையை அடுத்த தே.புதுக்கோட்டையில் ஒரு பெண், தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடியில் ஒரு ஆண், முக்குளத்தில் ஒரு ஆண், மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த ஒரு பெண், மானாமதுரை அருகே லாடனேந்தலை சேர்ந்த ஒரு ஆண், ஆபத்தாரன்பட்டியில் ஒரு ஆண், தெத்தனகாட்டில் 2 ஆண்கள் உள்பட 14 பேருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. திருப்புவனத்தில் வசித்து வந்த டி.புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் சிகிச்சைக்காக கடந்த 20-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
    கீழடியில் அகழாய்வு பணியில் அகரத்தில் சிறிய குவளை மற்றும் சுற்று சுவர்களில் சிறிய பானைகள் தென்பட்டன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. நேற்று அகரத்தில் சிறிய குவளை மற்றும் சுற்று சுவர்களில் சிறிய பானைகள் தென்பட்டன. இங்கு ஏற்கனவே சிறிய மண்பானைகள், நத்தை ஓடுகள், தங்க நாணயம், சங்கு வளையல்கள், மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் பழங்கால பெண்கள் பயன்படுத்திய அம்மிக்கல்லின் அரவைக்கல் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையில் உள்ள முதுமக்கள் தாழியில் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் மற்றும் சிறிய குவளை போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் செங்கல் கட்டிடப் பகுதி, பானைகள், விலங்கின எலும்புக்கூடு, மண் உலை பகுதி அருகே நெருப்பு கட்டமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிவகங்கையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து வந்த மண்ணடியை சேர்ந்த 60 வயது ஆண், சூளைமேட்டை சேர்ந்த ஒரு ஆண், போரூரை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், முகப்பேரை சேர்ந்த தந்தை மற்றும் அவரது மகளுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஒரு பெண், தேவகோட்டை அருகே உள்ள திராணி கிராமத்தில் ஒரு ஆண் மற்றும் சண்முகநாதபுரத்தை சேர்ந்த ஒரு பெண், மானாமதுரையை அடுத்த கீழக்கண்டனி மற்றும் சுந்தரநடப்பில் 2 பெண்கள், கல்லலில் 4 ஆண் மற்றும் ஒரு பெண், காரைக்குடி அமராவதி புதூரில் ஒரு ஆண் உள்பட 17 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

    அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பீதியால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பீதியால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகாசி நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் உள்ளது. நகர மக்கள் தங்களது கோரிக்கைகளை கூறி நிவாரணம் பெறவும், பிறப்பு, இறப்பு தகவல்களை பதிவு செய்து உரிய சான்றிதழ்களை பெறவும் இந்த அலுவலகத்துக்கு வருவது உண்டு. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செய்யப்படும் வளர்ச்சி பணிகள் குறித்தும், அது தொடர்பான நபர்கள் கமிஷனர், என்ஜினீயர் ஆகியோரை சந்தித்து உரிய ஆலோசனை கேட்டு செல்வது உண்டு.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பீதியால் சிவகாசி நகராட்சி அலுவலகத்துக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி அலுவலகத்துக்குள் செல்ல 3 வாசல்கள் இருந்த நிலையில் 2 வாசல்கள் எப்போதும் பூட்டியே இருக்கிறது.

    நகராட்சி சுகாதார அலுவலர் அறை உள்ள பகுதியில் இருக்கும் வாசல் மட்டும் திறந்து இருந்த நிலையில் தற்போது அந்த வாசலும் பூட்டப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க வசதியாக இந்த புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக அங்கு இருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி நிவாரணம் பெறவே நகராட்சி அலுவலகத்துக்கு வருவது உண்டு. முக்கிய பணிகளுக்காகவும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து உரிய ஆலோசனை பெறுவது வழக்கம். இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத்தின் இந்த புதிய முடிவு பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி நிவாரணம் பெறவும், அதிகாரிகளை சந்திக்கவும் தடையாக உள்ளதாக கூறப்படுகிறது.

    கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றால் நகராட்சி சார்பில் கிருமிநாசினி வைக்கப்பட்டு அதை பொதுமக்கள் பயன்படுத்த வற்புறுத்த வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்ல வேண்டும். அதை தவிர்த்து நகராட்சி அலுவலகத்தை பூட்டி வைப்பது ஏற்புடையது அல்ல.

    ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் வரிசையில் நிற்க அனுமதிக்கும் அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்குள் பொதுமக்கள் வர தடைவிதித்து இருப்பது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர் மைக்கேல் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் விசாரித்து உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
    ×