என் மலர்
உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம் தொடக்கம்
- திருப்புவனம் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு ஆரம்பப் பள்ளி மற்றும் தெற்கு ஆரம்பப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் லதா, பால் பாண்டி, நகர் தி.மு.க. செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி மன்ற துணை சேர்மன் ரகமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிதாசன், கண்ணன், வேல்பாண்டி, பாலகிருஷ்ணன், ராம லட்சுமி பாலகிருஷ்ணன், பத்மாவதி முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






