என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சீனிவாச திருக்கல்யாணம்
  X

  சீனிவாச திருக்கல்யாணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  திருப்பத்தூர்

  திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் சீனிவாசா திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் பூலாங்கு றிச்சியில் திருக்கல்யாணம் நடை பெற்றது.

  விழாவை முன்னிட்டு பூலாங்குறிச்சி கலைக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக பந்தல் அமைத்து வாழை மர தோரணங்கள் மின்விளக்குகள் கொண்டு பந்தல் முழுவதும் அலங்க ரிக்கப்பட்டன. வண்ண விளக்குகளால் அலங்கரிக் கப்பட்ட மண மேடையில் உற்சவர்கள் ஸ்ரீ தேவி பூதேவி சீனிவாச பெருமாள் சர்வ அலங்கா ரத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினார்கள்.

  தொடர்ந்து யாக பூஜை கள் திருமண சடங்கான காப்பு கட்டுதல் கன்னிகா தானம், பட்டு வஸ்திரம், பட்டுச்சேலைகள் சாத்தப்பட்டு பின்னர் திருமாங்கல்ய மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தி யம் முழங்க வேத மந்தி ரங்கள் ஒலிக்க பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க தேவி யர்களுக்கு திருமாங்கல்யம் அணி விக்கப்பட்டது.

  தொடர்ந்து கற்பூர தீபாராதனை காண்பித்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னர் வாரணம் ஆயிரம் பூஜைகள் நடைபெற்று கோடி தீபம் கும்ப தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்ச னைகள் செய்யப்பட்டன. நிறைவாக ஏகமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப் பட்டது.

  இதில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கல்யா ணத்தை கண்டு வழிபட்டனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனை வருக்கும் திருப்பதி யில் இருந்து கொண்டு வரப்பட்ட லட்டு பிரசா தங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அபிராமி ராமநாதன் செய்திருந்தார்.

  Next Story
  ×