என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானாமதுரையில் குவிந்துள்ள மண்பாண்ட பொருட்கள்.
பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக பானை, அடுப்பு
- பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக பானை, அடுப்புகளை வழங்க வேண்டும் என மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- டோக்கன் முறையில் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டால் பொதுமக்களும் மண்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ச்சி அடை வார்கள்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார பகுதியில் மண்பாண்ட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இங்கு ஆண்டு முழு வதும் சீசனுக்கு ஏற்ப மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி நடக்கிறது. இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ங்களிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் மண்பாண்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர்.ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக கரும்பு மற்றும் பொருட்கள் வழங்கப் படுகிறது.
இதேபோல் பாரம்பரிய மிக்க மண்பானைகளை விலையில்லாமல் வழங்க வேண்டும். டோக்கன் முறையில் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டால் பொதுமக்களும் மண்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ச்சி அடை வார்கள். இப்போது இல்லாவிட்டாலும் இனி வரும் காலங்களில் விலை யில்லாமல் குடும்ப அட்டை தாரர்களுக்கு மண்பாண்ட பொருட்கள் வழங்க வேண்டும் என்று மானாமதுரை வட்டார மண்பாண்ட தொழி லாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.






