என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் வழிப்பறி-2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
    X

    தொடர் வழிப்பறி-2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

    • 2 மர்மநபர்கள் காசாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றனர்.
    • போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை வெள்ளலூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே தனியார் பேக்கரி செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த பேக்கரியில் காசாளர் பணியில் இருந்தார்.அப்போது உள்ளே நுழைந்த 2 மர்மநபர்கள் காசாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றனர். மேலும், அந்த சாலை வழியாக சென்றவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்தனர்.

    இதுதொடர்பாக சுந்தரா புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    நேற்று இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் வெள்ளலூரை சேர்ந்த மதன்குமார் என்ற மில்கி மதன்(26), வெள்ளலூரை சேர்ந்த மூவேந்திரன்(24) என்பதும், பேக்கரியில் காசாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புயைடவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கைதான மதன்குமார் மற்றும் மூவேந்திரன் ஆகியோரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தர விட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடேசன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை கைதானவர்களிடம் வழங்கினார்.

    Next Story
    ×