என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னருக்கு எதிராக தனி தீர்மானம் - முதல்வர் ஸ்டாலின் நாளை தாக்கல் செய்கிறார்
    X

    முதல்வர் ஸ்டாலின்

    கவர்னருக்கு எதிராக தனி தீர்மானம் - முதல்வர் ஸ்டாலின் நாளை தாக்கல் செய்கிறார்

    • தமிழக கவர்னருக்கு எதிராக நாளை சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
    • இந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார்.

    சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கவர்னர் தெரிவிப்பதாகவும், அது மாநில நிர்வாகத்துக்கு ஏற்புடையதல்ல என்றும் கூறப்படுவதாக தெரிகிறது.

    எனவே சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட கால நிர்ணயத்துக்குள் கவர்னர்கள் அதற்கான ஒப்புதலை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×