search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சியை கண்டித்து கோவையில் தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
    X

    மாநகராட்சியை கண்டித்து கோவையில் தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

    • தினகூலியாக ரூ.721 என நிா்ணயித்து அரசாணை 62-ஐ நடைமுறைப்படுத்த மாநகராட்சிக்கு கலெக்டர் பரிந்துரைத்தாா்.
    • மாநகராட்சி அதிகாரிகள் பணம் இல்லை, நிதி இல்லை என கூறி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் சுகாதார பணியாளர்கள் சங்க செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    இதில், மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு தினகூலியாக ரூ.721 என நிா்ணயித்து அரசாணை 62-ஐ நடைமுறைப்படுத்த மாநகராட்சிக்கு கலெக்டர் பரிந்துரைத்தாா்.

    ஆனால், மாநகராட்சி நிா்வாகம் அந்த அரசா–ணையை செயல்படுத்தா–மல் பழைய ஊதியத்தையே வழங்கி வருகிறது.

    அடுத்த மாதம் முதல் தின கூலியாக ரூ.721 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இது குறித்து போரா ட்ட–த்தில் கலந்து கொ ண்டவர்கள் கூறிய–தாவது:-

    கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 3,600 பேர் உள்ளனர். இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்.

    இதனை வழங்க வலியுறுத்தி 5 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் பணம் இல்லை, நிதி இல்லை என கூறி வருகின்றனர்.

    இதனால், இன்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளோம். அடுத்த மாதம் அரசாணையின் படி சம்பளம் வழங்கவில்லை என்றால் அனைத்து வார்டுகளிலும் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி நிதி திரட்டி மாநகராட்சியிடம் கொடுக்க முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்

    Next Story
    ×