search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறையையொட்டி முட்டல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    தொடர் விடுமுறையையொட்டி முட்டல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது.
    • மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கும் வகையில் குடில், பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பூங்காவில் ஜல்லிக்கட்டு காளை மான், யானை உள்ளிட்ட சிலைகள் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர் சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு குவிந்தனர். தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் நீர்வீழ்ச்சியில் குளிக்க காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து வருகின்றனர். மேலும் முட்டல் ஏரியில் தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக படகு சவாரியும் செய்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றனர்.

    Next Story
    ×