search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூரில் லாட்டரி, மது விற்ற 11 பேர் கைது
    X

    ஓமலூரில் லாட்டரி, மது விற்ற 11 பேர் கைது

    • சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களை குறி வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓலூர் வட்டார கிராமங்களை குறி வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓமலூர் நகர், புளியம்பட்டி, கோட்ட மேட்டுப்பட்டி, பல்பாக்கி, இந்திராநகர், பச்சனம்பட்டி, திமிரிகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பர், 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.

    அதே போல சட்ட விரோதமாக சந்துகடைகள் வைத்து மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சந்துகடைகள் ஒவ்வொரு கிராமத்திலும் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யபடு கிறது. குறிப்பாக காமலாபுரம் கிராமத்தில் தான் அதிகள வில் சந்துகடைகள் வைத்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாட்டிலை திறந்து கலப்படம் செய்தும் மது விற்பதாக புகார்கள் கூறப்படுகிறது. அதனால், சந்துகடை வைத்து மது விற்பனை செய்யும் அனை வரும் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவக்குமார் உத்தர விட்டார்.

    இதனை தொடர்ந்து ஓமலூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்கும ரன் மற்றும் போலீசார் அனைத்து பகுதிகளிலும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், ஒரே நாளில் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் நேரடியாக விற்பனை செய்யாமல், செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதே போல சந்து கடை மூலம் மது விற்பனை செய்த பெண் உட்பட 6 பேரை போலீசார் அதிரடி யாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

    தொடர்ந்து ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 11 பேரி டமும் லாட்டரி விற்பனை செய்யக்கூடாது என்றும் சட்டவிரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று ஆலோசனை மற்றும் விழிப் புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இதே வேலையை செய்து வந்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.

    Next Story
    ×