search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்
    X

    ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்

    • ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • ஒருவருக்கு அரை கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தில் காணப்படுகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று தமிழகத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் முதற்கட்டமாக 15 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. தஞ்சையில் 8 கடைகளிலும், கும்பகோணத்தில் 7 கடைகளிலும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 15 கிலோ வழங்கப்பட்டு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் ஒருவருக்கு அரை கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இனி அடுத்த கட்டமாக மாவட்டத்தில் பல்வேறு ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×