என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதிக்கப்பட்ட வீதப்பட்டியலை முறைகேடாக மாற்றிய  9 மின் இணைப்புகளுக்கு ரூ.62 ஆயிரம் அபராதம்
    X

    அனுமதிக்கப்பட்ட வீதப்பட்டியலை முறைகேடாக மாற்றிய 9 மின் இணைப்புகளுக்கு ரூ.62 ஆயிரம் அபராதம்

    • கடையநல்லூர் கோட்டத்தில் பெருந்திரள் மின்னாய்வு பணி நடைபெற்றது.
    • ஆய்வு பணியில் மொத்தம் 1,914 மின் இணைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் கடையநல்லூர் பிரிவு - 1 அலுவலகத்தில் வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி உத்தரவுப்படி பெருந்திரள் மின்னாய்வு பணி நடைபெற்றது.

    அபராதம்

    இந்த பணிகளை கடைய நல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பிரேமலதா, மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, உதவி செயற்பொறியாளர் (பொது) சைலஜா, உதவி மின்பொறியாளர் (பொது) மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்டத்தில் இருந்து மின் பொறியாளர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வு பணியில் மொத்தம் 1,914 மின் இணைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மின்வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட வீதப்பட்டியலை முறை கேடாக மாற்றி பயன்படுத்திய 9 மின் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.62,275 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் அந்த 9 மின் இணைப்புகளும் மின் வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட சரியான வீத பட்டியல் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது. 134 மின் இணைப்புகளை ஒன்றிணைப்பதற்கு மின் நுகர்வோர்களிடம் அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×