search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி புத்தகத் திருவிழாவில் ரூ.51 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை
    X

    புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.


    தென்காசி புத்தகத் திருவிழாவில் ரூ.51 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை

    • புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கான புத்தகப்பரிசு சான்றிதழ் 270 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றது அதேநாளில் தென்காசி புத்தகத் திருவிழாவும் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிற்பட்டோட்டர் நல அலுவலர் குணசேகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஏடிபிசி சீவல முத்து, டாக்டர் அறிவழகன், வட்டார கல்வி அலுவலர்கள் இளமுருகன் , மாரியப்பன் கிளை நூலகர் சுந்தர் கலந்து கொண்டனர்.

    கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி- வினா, பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான புத்தகப்பரிசு சான்றிதழ் 270 பேர்களுக்கு வழங்கப்பட்டது.புத்தக திருவிழாவில் சிறப்பாக பணி ஆற்றிய 150 அரசு அலுவலர்களுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.


    புத்தக திருவிழாவிற்கு இதுவரை 1,02,415 பேர் வருகை தந்துள்ளனர். ரூ.51 லட்சத்திற்கும் மேலான மதிப்பில் நூல்கள் விற்பனையும் நடந்து உள்ளது. தென்காசி மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பபாசி நிறுவனத்தார் இதர பதிப்பகத்தார், விற்பனையாளர்கள், பொதுமக்கள், வாசகர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், தென்காசி மாவட்ட கல்வி நிறுவனங்கள் சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×