என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தங்கத்தில் முதலீடு செய்தவரிடம் ரூ.5.50 லட்சம் நூதன மோசடி
  X

  தங்கத்தில் முதலீடு செய்தவரிடம் ரூ.5.50 லட்சம் நூதன மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • 5.4 சதவீதம் வட்டி தரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

  கோவை

  கோவை உக்கடத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 48). இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூப் சேனலில் ஒளிபரப்பான விளம்பரத்தை பார்த்தேன். அதில், தங்கம் மற்றும் ஆயிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி நான் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தேன்.

  பின்னர் அதனுடன் தொடர்புடைய வாட்ஸ் ஆப் குரூப்பில் நான் இணைக்கப்பட்டேன். 2 நாட்கள் முதல் 360 நாட்கள் வரை தங்கம் மற்றும் ஆயிலில் முதலீடு செய்யலாம் எனவும், தொகைக்கு ஏற்ப 5.4 சதவீதம் வட்டி தரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பிய நான் தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டேன். முதற்கட்டமாக எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 42ஆயிரத்து 512 பணம் எடுக்கப்பட்டது.

  அதன்பின்னரும் படிப்படியாக எனது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.5.50 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் அந்த பணத்தை மீண்டும் தனது வங்கி கணக்கில் வரவு வைக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் நான் வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். பின்னர் அந்த லிங்க்கில் உள்ளே நுழைய முடியவில்லை.

  யூடியூப்பில் விளம்பரம் செய்து போலியான லிங்க் அனுப்பியும், வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்தும் என்னிடம் இருந்து ரூ.5.50 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே அந்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×