என் மலர்
ராணிப்பேட்டை
- உரிமையாளர் கைது
- போலீசார் சோதனையில் சிக்கினர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஆற்காடு பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது பஸ் நிலையம் அருகே கண்ணன் பூங்கா எதிரில் உள்ள பெட்டி கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஆற்காடு தாசில்தார் வசந்தி மற்றும் வருவாய் அதிகாரிகள் உதவியுடன் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர் ஆற்காடு ஆசாத் தெருவை சேர்ந்த தேவராஜ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்
- 1.5 கிலோ பாக்கெட்டுகள் பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நெமிலிக்கு செல்லும் சாலையில் உள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 1.5 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் செந்தில்குமார் (வயது 55) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் குட்கா விற்ற கடையை வருவாய் ஆய்வாளர் பிள்ளையார் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது நெமிலி சப்- இன்ஸ்பெக்டர் லோகேஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
- மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தபோது விபரீதம்
- கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்
காவேரிப்பாக்கம்:
நெமிலி அருகே உள்ள வேப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. விவசாயி, இவர் தனது பசுமாட்டை அருகிலுள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் இடி பசுமாட்டின் மீது விழுந்ததில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த் துறையினர் பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் பசுமாட்டை பரிசோதனை செய்தனர்.
- ரெயில் பயணிகள் சங்கம் எச்சரிக்கை
- நடைமேடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் செல்லும் பயணிகளிடம் இருந்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது.
இது குறித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான நைனா மாசிலாமணி கூறியதாவது:-
அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்
6-வது மற்றும் 7-வது பிளாட்பாரத்தில் அரக்கோணத்தில் இருந்து தக்கோலம், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றது. இதே போல் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரும் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அரக்கோணம் - தக்காலம் ரெயில் நிலையத்துக்கு இடையே பெண்களை குறி வைத்து கத்தியால் தாக்கி நகை, பணத்தை கொள்ளை அடிப்பதும் வழக்கமாக உள்ளது.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றும் வயதான மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டி பணம், நகையை கொள்ளை யடித்துள்ளனர்
இந்த சம்பவம் அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது.
இந்த சம்பவத்தில் இதுவரை கொள்ளையனை பிடிக்கவில்லை. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவர்களின் உடமை களுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் பணியில் இருக்கும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில் நிலையத்தில் இயங்கும் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
அரக்கோணம் பயணிகள் சங்கம் சார்பாக, சங்க உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏற்கனவே 6, 7-வது நடைமேடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண்காணிப்பு கேமரா அமைத்திருந்தால் கொள்ளையர்கள் பிடித்திருக்கலாம். எதையும் செய்யாமல் மெத்தன போக்கை ரெயில்வே துறை பின்பற்றி வருகிறது.
எனவே இதை அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கி றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும்.
இந்த போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அசம்பாவிதங்களை தடுத்திட போக்குவரத்துக்கு தடை
- மின்கம்பம், மின் கம்பிகளை போலீசார் அகற்றினர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் சென்னை பெங்களூர் அதிவிரை வுச்சாலை பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன இதற்கான சாலை போடும் பணியில் அதிக அளவில் வட மாநில தொழிலாளா்கள் ஈடு படுத்தப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் சாலை போடுவதற்காகா நாள் ஒன்றுக்கு 500 -க்கும் மேற்ப்பட்ட டிப்பா் லாரிகளில் மண் கொண்டு வந்து நிரப்பி வருகின்றனா்.
நேற்று மாலை 6.30 மணியளவில் வழக்கம் போல் மண்ணை கொட்டிவிட்ட வந்த டிப்பா் லாரி லாரியின் பின் பகுதியை கீழே இறக்காமல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பாணாவரம் - காவேரி ப்பாக்கம் சாலையில், சாலை ஓரம் இருந்த மின் ஒயர்களை லாரியின் பின் பக்க பகுதி இழுத்து வந்துள்ளது. இதனால் அருகில் இருந்த மின் கம்பம் தூக்கி வீசப்பட்டு பாணாவரம் - காவே ரிப்பாக்கம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.
இதனிடையே சாலையில் விழந்த மின்கம்பத்தால் மின் கம்பிகள் ஆங்காங்கே தொங்கியது . இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாணாவரம் மற்றும் போலீசார், பாணாவரம் துனை மின் நிலைய போர்மேன் விஜயகுமார், காமராஜ், சா்தாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட மின் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அசம்பாவிதங்களை தடுத்திட போக்கு வரத்துக்கு தடைவித்து சாலையின் நடுவே விழுந்து கிடந்த மின்கம்பத்தையும், மின் கம்பிகளையும் அகற்றினர். ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக ஏற்ப்பட்டிருந்த போக்குவரத்தை சீா் செய்தனா்.
இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் டிப்பா் லாரி டிரைவர் உத்திர பிரதேசத்தை சோ்ந்த ஷியாம் சிங் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
- தூங்கிக்கொண்டிருந்த போது துணிகரம்
- பைக் மற்றும் செல்போன் பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
தூத்துக்குடி மாவட்டம் முந்தைய புரத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் (வயது 31). டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மினி வேன் மூலம் லோடு களை ஏற்றி க்கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ராணிப்பேட்டை மாவ ட்டம், காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டி ருந்தார். அப்போது சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஓட்டல் அருகே வேனை நிறுத்தினார்.
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வேனில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் முத்து வேல் செல்போனை திடீரென பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துவேல் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடி சென்ற திருமலை ச்சேரி பகுதியைச் சேர்ந்த தீபக், வாலாஜாவை சேர்ந்த கோகுல் (22), மோனீஸ்வரன் (21), பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேசன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
- வேடந்தாங்கல் சுப்ரமணிய சாமி கோவிலில் குவிந்தனர்
- பல்லக்கில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி, வள்ளி, தேவசேனா கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்ரமணியசுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
இதை தொடர்ந்து சுப்ரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஒச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மயங்கி கிடந்தவர் காஞ்சீபுரத்தில் மீட்பு
- அரக்கோணத்தில் துணிகரம்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ெரயில் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது பெண்கள் பெட்டியில் திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.
அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார்.லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.
அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார். மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.
இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.
மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ெரயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.
காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர்.ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கிகிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து காஞ்சீபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சீபுரம் சென்றவுடன் லட்சுமியை ெரயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- பூஜைகளில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து ஆசி பெற்று சென்றனர்
- தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பல்வேறு யாகங்கள், பூஜைகள், சுமங்கலி பூஜை, நாட்டிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கி கடந்த 16-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 18-ந்தேதி முடிய 64 நாட்கள் நடைபெறும் மஹோத்சவம்-2023 விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு -கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் நேற்று மாலை நடைபெற்றது.
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் ஆன ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், மாலையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் ராகு கேது பெயர்ச்சி மகா யாகமும் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமத்துடன், அஷ்ட நாக பூஜையும், இரவில் சர்ப்ப பலி பூஜைகளும் நடைபெற்றது.
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம்,ரிஷபம்,மிதுனம் கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களும், ராகு-கேது திசை, புக்தி நடைபெறுபவர்களும் மகா யாகம் மற்றும் ராகு கேது அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து பீடாதிபதி முரளிதர சாமிகளிடம் ஆசியும், பிரசாதமும் பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்
- நகர செயலாளர் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் அ.தி.மு.க. 52- ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மஞ்சுநாதன் தலைமை தாங்கினார்.
கழக தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி, கழக செய்தி தொடர்பாளர் சசிரேகா, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அவைதலைவர் முன்னாள் சோளிங்கர் எம்.எல்.ஏ. சம்பத்,பேரூர் தலைவர் ஆறுமுகம், பேரூர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கோதண்டன், கவுன்சிலர்கள் ராம்குமார், அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
- பைக் பறிமுதல்
கலவை:
ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாலாஜா அணைக்கட்டு ரோட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 37) என்பதும், பைக்கில் 2கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து கலால் போலீசார் ராஜேஷை கைது செய்து, 2கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ. 20ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- கலெக்டர் வேண்டுகோள்
- அதிகாரிகள், தொழில் நிறுவனத்தினர் கலந்துக்கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் இதர வளர்ச்சி உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட தொழில் நிறுவனங்கள் சமூகப் பங்களிப்பு நிதி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ள மாவட்டமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு மூலமாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆண்டுதோறும் வழங்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இருந்த போதிலும் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடுகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆகவே தொழில் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியை வழங்க முன்வர வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி மற்றும் சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட பல்வேறு கோரிக்கைகள் இருந்து வருகிறது. சிறந்த முறையில் தொழில் செய்து வரும் அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களுடைய சமூக பங்களிப்பு நிதியை வழங்கி ராணிப்பேட்டை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு நீங்களும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்தகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், தொழில் நிறுவனத்தினர் கலந்துக்கொண்டனர்.






