என் மலர்
ராணிப்பேட்டை
- சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
வாலாஜா அடுத்த கீழ் விஷாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது57). இவர் நேற்று காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராணிப்பேட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்
- மாணவ, மாணவிகளை பாதுகாப்புடன் அழைத்து வர உத்தரவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் 3-வது வாரம் புத்தக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-
புத்தக கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் இடம் பெற ஏதுவாக தனித்தனியாக புத்தக அரங்குகள் , தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உணவுக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சாரத்துறையின் சார்பாக தடையில்லாத மின்சாரம், பொதுப்ப ணித்துறையின் மூலமாக அரங்குகளில் ஒளிவிளக்கு, ஒளிப்பெருக்கி, மேடை, ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி அதன் உறுதித்தன்மையினை ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்.
பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளை பாதுகாப்புடன் புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர ஏதுவாக பஸ் வசதிகள், நாள்தோறும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அரசுத் துறைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேச்சா ளர்களின் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
புத்தக திருவிழாவில் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளை துறை அலுவ லர்கள் ஒருங்கிணைந்து அமைக்க வேண்டும்.
தெரியப்படுத்த வேண்டும்
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள புத்தக வாசிப்பாளர்கள், மாணவ, மாணவிகள்மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் புத்தக திருவிழா நடை பெறுவது குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் வளர்மதி பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட நூலக அலுவலர் பழனி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
ஆற்காடு நகராட்சி தேவி நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதார வளாகம் கட்டிடம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டித்தை திறந்து வைத்தார்.
இதில் நகர மன்ற துணை தலைவர் பவளகொடி சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் முனவர்பாஷா, அணு அருண், ராஜலட்சுமி துரை, தொழிலதிபர் ஆர்.எஸ்.சேகர், ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபிநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் காந்தி வழங்கினார்
- மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த கல்விஆண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இதில் 8 பேருக்கு முதலாம் ஆண்டு படிப்பிற்கு தேவையான பாட புத்தகங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,விஸ்வாஸ் பள்ளியின் தலைவர் கமலா காந்தி ஆகியோர் தங்கள் சொந்த செலவில் வழங்கினர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் அலுவலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
- மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
- உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லாலாபேட்டையில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வாலாஜா மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அண்ணா தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் பெல்.தமிழரசன் ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான முக்கூர்.சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்தலுக்கான சிறப்பு முகாமில் நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விதிகள் மீறி செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து விளக்கம்
- 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணம் செய்யக்கூடாது
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சித்தூர் செல்லும் சாலை அருகே உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப் பயிலும் மாணவர்களுக்கு, காவல்துறை சார்பில் பள்ளியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, சோளிங்கர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமை தாங்கினார்.
மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், வீடு மற்றும் பள்ளி அருகே போதைப்பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தால், அதுகுறித்து காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பாலியல் வன்கொடுமை குறித்தும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணம் செய்யக்கூடாது.
விதிகள் மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி காவல்துறை சார்பில் எடுக்கப்படும் தண்டனைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில், உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா கேத்ரின் உட்பட பலர் பங்கேற்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த கொண்ட குப்பம் கிராமம்,சிலோன் காலனி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வர்கள் ரவிகுமார் (42), மணிகண்டன்(40).
இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பள்ளேரி- வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்தாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை தாக்கிவிட்டு ரவிக்குமார் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம், மற்றும் 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இதில் ரவிக்குமார் காயம் அடைந்தார். பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- திருமணமாகி மகன், மகள் உள்ளனர்
- மின்விசிறியில் பிணமாக தொங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) இவர் திருவலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோத் குமார் புடவையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தலா ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது
- பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே பஸ்களில் ஏர் ஹாரன் பொருத்தப்ப ட்டுள்ளதா என வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை திடீர் ஆய்வு செய்தனர்.
தனியார் மற்றும் அரசு பஸ்கள் என மொத்தம் 25 பஸ்களில் சோதனை யிட்டனர்.
இதில் 4 பஸ்களுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் ரூ.40ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 13 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன் குழாய் அகற்றப்பட்டது. பஸ் டிரைவர்களிடம் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டு இருந்தால் ஓட்டுனர் உரிமம் 3மாதம் நிறுத்திவைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க ப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் ஒரு வருடம் வரி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடைகளுக்குc
- போலீசார் சோதனையில் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்படி, மாவட்டம் முழுவதிலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நேற்று கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது அரக்கோணம், வாலாஜா, சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் 81 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வருவாய்த்து றையினர் மூலம் கடைக ளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
- சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்
- செலவினங்களை மதிப்பீடு செய்வது குறித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
மேலும் அரக்கோணம்-ஒச்சேரி செல்லும் சாலை 4 வழிச்சா லையாக விரிவாக்கம் செய்ய உள்ளதால் பனப்பாக்கம் பேரூராட்சி வழியே செல்லும் குடிநீர் குழாய்களை இடம் மாற்றியமைக்க ஆகும் செலவினங்களை மதிப்பீடு செய்வதுகுறித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது.
மழைக்காலம் என்பதால் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இளநிலை உதவி யாளர் மோகனகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை
- சாலை விபத்துகளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்
கலவை:
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை ஆற்காடு டவுன் சந்திப்பில் புதிய ரவுண்டானா, தேசிய நெடுஞ்சாலைதுறையால் கட்டப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலையின் சந்திப்பு அருகே அடிக்கடி விபத்துகள் நடப்பதால் புதிய ரவுண்டானா அவசியமாக உள்ளது
திட்டத்தின் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலை மற்றும் ஆற்காடு டவுனுக்கு செல்லும் பிரதான பாதையின் மையத்தில் சுமார் 1,500 சதுர அடியில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது.இதில் 1.5 மீட்டர் உயரத்திற்கு வேலி அமைக்கப்படும்.
சுற்றுபகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்படும். மேலும் மிளிரும் விளக்குகள், பிரதிபலிப்பான்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படும்.நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை, குறிப்பாக சென்னையில் இருந்து, ஆற்காடு சந்திப்புக்கு அருகில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.
போக்குவரத்து ஒழுங்குமுறை
சாலையோர மின் விளக்குகள் முதல் அனைத்து மின் இணைப்புகளும் சரிபார்க்கப்படும். உடைந்த கான்கிரீட் நடைபாதைகள் மீண்டும் அமைக்கப்படும்.
இதனால் சென்னையை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் முன்பு போல் ஆற்காடு நகருக்குள் நேரடியாக செல்ல வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, பாலாற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் வழியாக செல்ல முடியும்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஜனவரி மாதம் முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான சாலை விபத்துகளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 96 பேர் மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் பகுதிகளில் இறந்துள்ளனர். 14 பேர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பெரும்பாலும் பைக்குகளில் செல்பவர்கள் மற்றும் சாலையோரமாக நடந்து செல்பவர்கள் அதிகமாக இறந்துள்ளனர்.
தற்போது ரவுண்டானா அமையும் ஆற்காடு சந்திப்பு, மாவட்ட போலீஸாரால், விபத்து அதிகம் ஏற்படும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் அமைய உள்ள புதிய ரவுண்டானா, டவுனில் இருந்து பைக் ஓட்டுபவர்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றனர்.






