நகர்ப்புற சுகாதார வளாகம் கட்டுமானப் பணி

ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நகர்ப்புற சுகாதார வளாகம் கட்டுமானப் பணி தொடங்கிய காட்சி.
நகர்ப்புற சுகாதார வளாகம் கட்டுமானப் பணி தொடங்கிய காட்சி.
Published on

கலவை:

ஆற்காடு நகராட்சி தேவி நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதார வளாகம் கட்டிடம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டித்தை திறந்து வைத்தார்.

இதில் நகர மன்ற துணை தலைவர் பவளகொடி சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் முனவர்பாஷா, அணு அருண், ராஜலட்சுமி துரை, தொழிலதிபர் ஆர்.எஸ்.சேகர், ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபிநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com