என் மலர்
நீங்கள் தேடியது "The consultation meeting was chaired by the Collector"
- கலெக்டர் வேண்டுகோள்
- அதிகாரிகள், தொழில் நிறுவனத்தினர் கலந்துக்கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் இதர வளர்ச்சி உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட தொழில் நிறுவனங்கள் சமூகப் பங்களிப்பு நிதி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ள மாவட்டமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு மூலமாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆண்டுதோறும் வழங்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இருந்த போதிலும் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடுகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆகவே தொழில் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியை வழங்க முன்வர வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி மற்றும் சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட பல்வேறு கோரிக்கைகள் இருந்து வருகிறது. சிறந்த முறையில் தொழில் செய்து வரும் அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களுடைய சமூக பங்களிப்பு நிதியை வழங்கி ராணிப்பேட்டை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு நீங்களும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்தகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், தொழில் நிறுவனத்தினர் கலந்துக்கொண்டனர்.






