என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு உப்பு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- அரசு உப்பு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பொதுச் செயலாளர் குமரவடிவேல், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
சாயல்குடி
சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் உப்பு நிறுவனத்தில் பணிக்கொடை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் பச்சமால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் குமரவடிவேல், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார். 2022-ல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பணிக்கொடை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் தனி ராம், முருகவேல், வடிவேல், அற்புதமணி, காட்டு ராஜா, கலாவதி, சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story