என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்தின அங்கி சேவையில் அருள்பாலித்த பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்கள்.
தஞ்சை பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
- யோக நரசிம்ம பெருமாளுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்.
தஞ்சாவூர்:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம். பொதுவாக சனிக்கி ழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை. இதனால் புரட்டாசி மாத சனிக்கி ழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் தஞ்சை கொண்டிரா ஜபாளையம் பகுதியில் உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.
பெருமாளுக்கு பல்வேறு பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்.
இதேப்போல் பிரசன்ன பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ரத்தின அங்கி சேவையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேப்போல் தஞ்சையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.






