என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி சனிக்கிழமை-கோவை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    புரட்டாசி சனிக்கிழமை-கோவை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கும் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக, காரமடை அரங்கநாத சுவாமி கோவில் அமைந்து உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் மாசிமகம் தேர்த்திருவிழா மற்றும் புரட்டாசி சனிக்கி ழமை ஆகியவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி காரமடை பெருமாள் கோவிலில் நடப்பாண்டுக்கான புரட்டாசி 3-வது சனிக்கி ழமை சிறப்பு வழிபாடு இன்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டது.

    இதனையொட்டி இன்று காலை முதலே மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதன் காரணமாக கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அரங்கனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கும் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    காரமடை பெருமாள் கோவிலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் லோகநாதன் மற்றும் தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.இேதபோல் கோவை பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×