என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அக்டோபர் மாத மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 9.11.2016 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்திடலில் நடைபெறுகிறது.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான அக்டோபர் மாத மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 9.11.2016 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்திடலில் தடகளம், கூடைப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் இறகுப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) விளையாட்டுகளில் கீழ்க்காணும் நிகழ்வுகளில் நடத்தப்படவுள்ளது.

    100மீ, 400மீ 1500 மீ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், (ஆடவர் மற்றும் மகளிர்) குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல்

    1. கூடைப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்)

    2. இறகுப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்)

    போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.தடகளம் விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் ஒரு விளையாட்டு நிகழ்வில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

    அக்டோபர் 2016-ஆம் மாத மாதாந்திர போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 9.11.2016 அன்று காலை 8.00 மணிக்கு விளையாட்டரங்கத்திற்கு வந்து, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
    அன்னவாசல் அருகே கார் மின்கம்பத்தில் மோதியதில் டாக்டர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    இலுப்பூர்:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. டாக்டர். இவர் இலுப்பூரில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூருக்கு காரில் சென்று வருவது வழக்கம்.

    வழக்கம்போல நேற்று அவர், காரில் இலுப்பூரில் உள்ள கிளினிக்கிற்கு சென்று விட்டு புதுக்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் அன்னவாசல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜா, அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

    இதில் அந்த மின்கம்பம் உடைந்து காரின் மீது விழுந்தது. இதில் டாக்டர் ராஜா சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    விராலிமலை வட்டாரத்தில் விதை கிராம திட்ட பயிற்சி மருதம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    விராலிமலை

    விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2016-2017) மாவட்டத்திற்குள்ளான பயிற்சி என்ற இனத்தின் கீழ் விதை கிராம திட்ட (நெல்) விவசாயிகள் பயிற்சியானது மருதம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    இப்பயிற்சி கூட்டத்திற்கு வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குநருமான எட்வர்ட் சிங் தலைமை வகித்து விதை கிராம பயிற்சியின் நோக்கத்தினை குறித்தும், தற்போது செயல்படுத்தபட்டு வரும் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் கூறினார்.

    வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) செல்வி விதை இரகங்களை தேர்வு செய்வது பற்றியும், விதையை கடினப்படுத்துதல் ,உயிரியல் , இராசாயன மற்றும் உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்வது பற்றியும், இயந்திரம் மூலம் விதைப்பு செய்தல்,பயிர் இடைவெளியை பராமரித்தல் , களை நிர்வாகம், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் மற்றும் அவற்றை ஒருங்கணைந்த முறையில் கட்டுபடுத்துவது பற்றியும் , இதர நேர்த்திகள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்.

    உதவி விதைஅலுவலர் பூபதி விதைப் பண்ணை பதிவு செய்வது பற்றியும், விதைச் சான்றளிப்பு கட்டணங்கள் பற்றியும், கலப்பின செடிகளை அகற்றுவது பற்றியும் , விதைகளை உலர்த்துதல் பற்றியும், சுத்திகரிப்பு பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் சங்கரபாண்டியன் நெல் வயலில் இலை வண்ண அட்டையை பயன்படுத்தி எவ்வாறு உரத் தேவையை அறிந்து உரமிடுவது பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தார். முன்னதாக இவர்களை வரவேற்று வட்டார தொழில்நுட்ப மேலாளர் த.லெட்சுமி பிரபா பேசினார்.

    இப்பயிற்சியில் கலந்து கொண்ட 40 விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப கையேடு, குறிப்பேடு போன்றவை வழங்கப்பட்டன. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உமா மகேஸ்வரி , சுப்பிரமணி , ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் துணை வேளாண்மை அலுவலர்வெங்கடாசலபதி நன்றி கூறினார்.

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சரால் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கவிநாடு மேற்கு ஊராட்சி, அத்திரிப்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிட கட்டுமான பணியையும், அகரப்பட்டி சாலையின் இருபுறமும் ரூ.10,78,200- மதிப்பீட்டில் நடப்பட்டு வரும் மரக்கன்றுகள் பணியையும், 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சி, கட்டியாவயலில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.12000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 கழிவறைகள் கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் வடவாளம் ஊராட்சி, நெப்பியப்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டுமானப்பணியையும், எம்.குளவாய்ப்பட்டி ஊராட்சி, ராமச்சந்திரகுளத்தில் ரூ.27,33,000 மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள மரம் நடுதல் பணியையும், மணவிடுதி ஊராட்சி, மணவி டுதியில் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிட கட்டுமான பணியையும், கம்மங்காடு மேலப்பட்டியில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீட்டின் கட்டுமான பணியையும் என மொத்தம் ரூ.81,69,200- மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் போது தனிநபர் இல்லக்கழிவறைகளை அனைவரும் முறையாக பயன்படுத்தவும், குளங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்த்து தினமும் உரிய முறையில் நீர் ஊற்றி பராமரிக்கவும், கிராமப்பகுதிகளில் உள்ள வேலிக்கருவை மரங்களை முழுவதுமாக அகற்றவும், பசுமை வீடு மற்றும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்களில் மின்சாதனங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக முடிக்கவும், குளத்தில் உள்ள பழுதடைந்த பாலத்தை உடனடியாக சரிசெய்யவும், மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு விரைவாக கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    மலேசிய தொழிலதிபர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நயினா முகமது (வயது 50). இவர் மலேசியா நாட்டில் தொழில் செய்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார்.

    இதன் காரணமாக அரசர்குளத்தில் உள்ள அவரது வீடு காலியாக உள்ளது. அவரது வீட்டின் பராமரிப்பு பணிக்காக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தினமும் நயினா முகமது வீட்டிற்கு சென்று பராமரிப்பு பணி செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பராமரிப்பு பணிக்காக ஊழியர் வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும்.

    இது குறித்து நாகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே 15-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெரியாலூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு 1200-க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பலர் திருச்சி, மதுரை, காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

    அவர்களில் காளிமுத்து, கேவேந்திரன், பழனிச்சாமி, சினேகா, பழனி, அண்ணாவி, முத்துலட்சுமி, முருகன், காசிநாதன், இந்துமதி, கீர்த்தனா, அம்பிகா, அபிராமி, பார்வதி, மற்றொரு கீர்த்தனா ஆகியோரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பெரியாலூர் பகுதியில் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கொடியேற்றம் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி 10. 30 மணி வரை நடைபெற்றது.

    இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு காப்பு கட்டப்பட்டது.அதனைத்தொடர்ந்து தினமும் சுப்பிரமணியர் , வள்ளி தெய்வானை சமேதராக சிங்கம், மயில், குதிரை, பறவை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி விராலிமலையின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 5ம் தேதி(சனிக்கிழமை) நடை பெறுகிறது. அதனைத் தொடர்ந்து 7ம் நாள் திருக்கல்யாணம், 8ம் நாள் வெள்ளிக்குதிரை வீதிஉலா, 9ம் நாள் விடையாத்தியுடன் கந்தசஷ்டி விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் ஆர். பாண்டியராஜூ, மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமி கோவிலில் அம்மன் பாதத்தில் வேட்பு மனுவை வைத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமி தனது வேட்பு மனு படிவங்களுடன் புதுக்கோட்டைக்கு வந்தார்.

    அங்கு ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்திற்கு சென்ற அவர், அங்கு 108 நெய் தீபங்கள் ஏற்றி, புவனேஸ்வரி அம்மன் மற்றும் அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு பட்டு புடவை சாத்தி வழிபட்டார். அதன் பின்னர் வேட்பு மனு படிவங்களை அம்மன் பாதங்களில் வைத்து பூஜைகள் செய்து பெற்றுக்கொண் டார்.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவதற்கு வருகிற 2-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4 மாத கால ஆட்சியில் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளோம். தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக கூறியுள்ளார்.

    காவிரி பிரச்சனையில் கர்நாடகாவிற்கு ஆதரவாகத் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உரிமையை விட்டுகொடுக்க முடியாது.

    நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஜான் குமாரை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடையாது. ஜான் குமார் தற்போதும் எனது வெற்றிக்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    புதுச்சேரி மாநில எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சபாநாயகர் சட்டசபை குழுக்களை அமைக்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் புதுச்சேரி மாநில சபாநாயகரிடம் ஏற்கனவே அரசு சார்பில் சட்டசபை குழுக்களை அமைப்பதற்கான பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அது தாமதமாகிறது. விரைவில் சட்டசபை குழுக்களை சபா நாயகர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனருக்கும், புதுச் சேரி அரசிற்கும் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இலுப்பூர் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் குமார், சக்திவேல், வடிவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    விராலிமலை:

    இலுப்பூர் அருகே உள்ள சா.குறிச்சிப்பட்டியில் தேசியம் காத்த செம்மல் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பிலும் பசும்பொன்.தேவர் ஐயா நற்பணிமன்றம் சார்பிலும் அரசு பள்ளிகளில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இதையொட்டி இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்  பிரபாகரன் தலைமையிலும், ராப்பூசல் அரசு மேல் நிலைப் பள்ளியில் தலை மையாசிரியர் திருவாய் மொழி தலைமையிலும், திம்மியம்பட்டி ஊ.ஒ. தொடக்கப் பள்ளியில் மைக்கேல் மதியரசன் தலைமையிலும் என மூன்று பள்ளிகளில் நூறு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    தொடர்ந்து இலுப்பூரிலுள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் குமார், சக்திவேல், வடிவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    அறந்தாங்கியை அருகே உள்ள அரசர்குளம் மேல்பாதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 72). இவருடைய மனைவி மும்தாஜ் (68). இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்ரகுமான் கடந்த சில நாட்களுக்கு தனது மனைவி மும்தாஜ்வுடன், ஒரு சிகிச்சைக்காக காரைக்குடி சென்றுள்ளார்.

    இதையறிந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு அப்துல்ரகுமான் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டின் உள்ளே இருந்த பீரோக்களை உடைத்து, அதில் இருந்த 11 பவுன் தங்கநகை, வெள்ளி கொலுசுகள், கைக்கெடிகாரங்கள் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.

    இச்சம்பவம் குறித்து அப்துல்ரகுமான் நாகுடி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூரை அடுத்த நெடுகன்பட்டியில் பிரசித்தி பெற்ற சீர்சாயபு ஒளியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்திய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    கீரனூர்:

    கீரனூரை அடுத்த நெடுகன்பட்டியில் பிரசித்தி பெற்ற சீர்சாயபு ஒளியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்திய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    அதே போல் மந்தபிடாரி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகம், குன்றாண்டார் கோவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பால்ராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் பவுண் துரை, அவைத்தலைவர் நாசர், கிளைச்செயலாளர் ராமச்சந்திரன், அய்யப்பன், ரபீக், முருகேசன் ராமர், ஜெயராமன், ஆகியோர் மற்றும் சுற்றுவட்டார அ.தி.மு.க.வினர், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    பூஜையின் முடிவில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் மற்றும் பூந்தி வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு தனி அலுவலர் நியமனம், தனி அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து அறிவுரை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு தனி அலுவலர் நியமனம், தனி அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து அறிவுரை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் (24.10.2016) முடிவடைந்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து ஆணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, குன்றாண்டார்கோவில், அரிமளம், திருமயம், அன்னவாசல், பொன்னமராவதி, விராலிமலை, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தனி அலுவலராகவும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மண மேல்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம், கந்தர்வக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குநர் (தணிக்கை) தனி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட ஊராட்சிக்குழு அமைப்புக்கு இணை இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தனி அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் தற்போதைய பதவி சார்ந்த பொறுப்புகளுடன் கூடுதலாக தனி அலுவலர் பொறுப்புகளையும், தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் விதிகள், வழிகாட்டி நெறிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். தமிழகஅரசால் கிராம ஊராட்சி தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) 25.10.2016 முற்பகல் பொறுப் பேற்கும் போது ஊராட்சியிலுள்ள பதிவேடுகள், ரொக்கப்புத்தகங்கள் பயன் படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத காசோலைப் புத்தகங்கள், வங்கிப் பாஸ் புத்தகங்கள் ஆகியவற்றை பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண் டும். பொறுப்பில் எடுத்துக் கொண்டதற்கான அறிக்கையினை 26.10.2016 காலை 10 மணிக்குள் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும்.

    கிராம ஊராட்சி வங்கிக் கணக்குகளை இயக்கும் பொறுப்பு தனி அலுவலர் - வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் 25.10.2016ம் தேதியில் காசாக்கப்படாமல் நிலுவையில் உள்ள காசோலைகள் கணக்கிட்டு அந்த காசோலைகளை வங்கியில் அனுமதிக்கும் போது வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்ற விபரத்தினை வங்கி மேலாளர்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர் மூலம் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

    கிராம ஊராட்சி தனி அலுவலரின் பொறுப்புகளான ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், வங்கிக் கணக்குகள் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல், பணிகள் மேற்கொள்ளுதல், வருவாய் இனங்கள் வசூல் செய்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், சுகாதாரப்பணிகள் மேற் கொள்ளுதல், அரசு திட்டங்களின் செயல் பாடுகளை கண்காணித்தல் போன்ற பல்வேறு பணி களையும், ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் வட்டார ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், பணிகள் மேற் கொள்ளுதல், அரசு திட்டங்களின் செயல் பாடுகளை கண்காணித்தல் போன்ற பல்வேறு பணிகளையும், மாவட்ட ஊராட்சி தனி அலுவலர் மாவட்ட ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், பணிகள் மேற் கொள்ளுதல், பராமரிப்பு பணிகளை மேற் கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளையும் மற்றும் அனைத்து தனி அலுவலர்களுக்கான பொதுவான அறிவுரைகளையும் உரிய முறையில் கடைபிடித்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் விதிகளை பின்பற்றி சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் பேசினார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×