search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.81.69 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.81.69 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சரால் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கவிநாடு மேற்கு ஊராட்சி, அத்திரிப்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிட கட்டுமான பணியையும், அகரப்பட்டி சாலையின் இருபுறமும் ரூ.10,78,200- மதிப்பீட்டில் நடப்பட்டு வரும் மரக்கன்றுகள் பணியையும், 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சி, கட்டியாவயலில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.12000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 கழிவறைகள் கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் வடவாளம் ஊராட்சி, நெப்பியப்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டுமானப்பணியையும், எம்.குளவாய்ப்பட்டி ஊராட்சி, ராமச்சந்திரகுளத்தில் ரூ.27,33,000 மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள மரம் நடுதல் பணியையும், மணவிடுதி ஊராட்சி, மணவி டுதியில் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிட கட்டுமான பணியையும், கம்மங்காடு மேலப்பட்டியில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீட்டின் கட்டுமான பணியையும் என மொத்தம் ரூ.81,69,200- மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் போது தனிநபர் இல்லக்கழிவறைகளை அனைவரும் முறையாக பயன்படுத்தவும், குளங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்த்து தினமும் உரிய முறையில் நீர் ஊற்றி பராமரிக்கவும், கிராமப்பகுதிகளில் உள்ள வேலிக்கருவை மரங்களை முழுவதுமாக அகற்றவும், பசுமை வீடு மற்றும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்களில் மின்சாதனங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக முடிக்கவும், குளத்தில் உள்ள பழுதடைந்த பாலத்தை உடனடியாக சரிசெய்யவும், மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு விரைவாக கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×