என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: கலெக்டர் தகவல்
    X

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: கலெக்டர் தகவல்

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு தனி அலுவலர் நியமனம், தனி அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து அறிவுரை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு தனி அலுவலர் நியமனம், தனி அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து அறிவுரை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் (24.10.2016) முடிவடைந்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து ஆணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, குன்றாண்டார்கோவில், அரிமளம், திருமயம், அன்னவாசல், பொன்னமராவதி, விராலிமலை, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தனி அலுவலராகவும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மண மேல்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம், கந்தர்வக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குநர் (தணிக்கை) தனி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட ஊராட்சிக்குழு அமைப்புக்கு இணை இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தனி அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் தற்போதைய பதவி சார்ந்த பொறுப்புகளுடன் கூடுதலாக தனி அலுவலர் பொறுப்புகளையும், தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் விதிகள், வழிகாட்டி நெறிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். தமிழகஅரசால் கிராம ஊராட்சி தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) 25.10.2016 முற்பகல் பொறுப் பேற்கும் போது ஊராட்சியிலுள்ள பதிவேடுகள், ரொக்கப்புத்தகங்கள் பயன் படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத காசோலைப் புத்தகங்கள், வங்கிப் பாஸ் புத்தகங்கள் ஆகியவற்றை பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண் டும். பொறுப்பில் எடுத்துக் கொண்டதற்கான அறிக்கையினை 26.10.2016 காலை 10 மணிக்குள் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும்.

    கிராம ஊராட்சி வங்கிக் கணக்குகளை இயக்கும் பொறுப்பு தனி அலுவலர் - வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் 25.10.2016ம் தேதியில் காசாக்கப்படாமல் நிலுவையில் உள்ள காசோலைகள் கணக்கிட்டு அந்த காசோலைகளை வங்கியில் அனுமதிக்கும் போது வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்ற விபரத்தினை வங்கி மேலாளர்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர் மூலம் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

    கிராம ஊராட்சி தனி அலுவலரின் பொறுப்புகளான ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், வங்கிக் கணக்குகள் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல், பணிகள் மேற்கொள்ளுதல், வருவாய் இனங்கள் வசூல் செய்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், சுகாதாரப்பணிகள் மேற் கொள்ளுதல், அரசு திட்டங்களின் செயல் பாடுகளை கண்காணித்தல் போன்ற பல்வேறு பணி களையும், ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் வட்டார ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், பணிகள் மேற் கொள்ளுதல், அரசு திட்டங்களின் செயல் பாடுகளை கண்காணித்தல் போன்ற பல்வேறு பணிகளையும், மாவட்ட ஊராட்சி தனி அலுவலர் மாவட்ட ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், பணிகள் மேற் கொள்ளுதல், பராமரிப்பு பணிகளை மேற் கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளையும் மற்றும் அனைத்து தனி அலுவலர்களுக்கான பொதுவான அறிவுரைகளையும் உரிய முறையில் கடைபிடித்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் விதிகளை பின்பற்றி சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் பேசினார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×