என் மலர்
புதுக்கோட்டை
அரசுபஸ் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் அவதியடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையிலிருந்து துவார் செல்லும் 12 ஏ அரசு பஸ் புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு இச்சடி, வடவாளம், சம்பட்டிவிடுதி, மழையூர், துவார் வரை சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சென்று வருகிறது.
இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ&மாணவிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை அந்த பஸ்சின் படிக்கட்டு திடீரென உடைந்தது.
இதனால் பயணிகள் அவதியடைந்தனர். மேலும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆலங்குடி ஒழுங்கு-முறை விற்பனைக்-கூடத்தின் மூலம் 300 மெ.டன் உளுந்து கொள்-முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்-கூடத்தின் மூலம் 300 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.63.00- என்ற விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்படும். உளுந்து கொள்முதல் வரும் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் உளுந்துக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தமிழ்நாடு உளுந்து விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த உளுந்து கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, ஆலங்குடி விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், திருவரங்குளம் உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆதனக்-கோட்டை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தினசரி மண்டகப்படி தாரர்களால் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு கோவில் எதிர்புறம் உள்ள கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது திருவிழாவை-யொட்டி பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பால்-குடம், தொட்டில் காவடி பறவைக் காவடி, அலகு குத்துதல் மற்றும் தங்களின் பல்வேறு நேர்த்திக் கடன்களை அம்பாளுக்கு செலுத்-தினார்கள்.
நேற்று இரவு அம்மன் யாளி வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதனக்கோட்டை மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்-கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மண்டகப்படி தாரர்கள், விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தன.ர்பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வ-கோட்டை ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்.

வாகனத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் புஷ்பம் (வயது 65). இவர் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் பின் பக்கம் அமர்ந்து கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்சேரிக்கு வந்து கொண்டிருந்தார்.
ஆற்றுப்பாலம் அருகே வரும் போது வாகனத்தில் உட்கார்ந்திருந்த புஷ்பம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் பழனிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரசு திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
75-வது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பிறகு நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது, இந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்த தியாகிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தேசிய மற்றும் மாநில அளவிலான சுதந்திரப் போராட்ட தியாகிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கண்காட்சி அரங்குகள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரால் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், இக்கண்காட்சியை பார்வையிட வருகை தரும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்தும் தெரிந்துகொள்வதன் மூலம் அவர்களின் குறைகளை தீர்க்க இயலும்.
வரும் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை:
இலுப்பூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்னி முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி, ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 12ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதிகள், செங்கப்பட்டி, காலாடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர்,
தச்சம்பட்டி, வெள்ளாஞ்சார், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி,
வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திரப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, மலம்பட்டி, கல்லுப்பட்டி, ஆலங்குடி, சித்தம்பூர், ராப்பூசல், லெக்கனாம்பட்டி, பையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் ஊராட்சியில், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா-கிருஷ்ணன், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய-நாதன் ஆகியோரது முன்னி-லையில் பயனாளிகளுக்கு வெள்ளாடு-கள்,- செம்மறியாடுகளை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரகுபதி பேசியதாவது, இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆடுகளின் எண்ணிக்கை வருங்-காலங்களில் அதிகரித்து, அவற்றை விற்பனை செய்வதன் மூலம் பயனாளிகள் அனைவரும் தங்களை தொழில் முனைவோராக்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ததுடன், புதிதாக தொழில் தொடங்க புதிய கடன்களையும் வழங்கி வருகிறார்கள். எனவே மகளிர்கள் அனைவரும் இத்திட்டங்கள் மூலம் தங்கள் வாழ்-வாதாரத்தை மேம்-படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு 1,300 பெண் பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 6,500 வெள்ளாடுகள்,
செம்மறியாடுகள் ரூ.2,27,50,000 மதிப்பீட்டிலும், காப்பீட்டுக் கட்டணம் ரூ.7,02,975 மதிப்பீட்டிலும், தீவன செலவு ரூ.13,00,000 மதிப்பீட்டிலும், சில்லறை செலவினம் ரூ.97,500 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் ரூ.2,48,50,475 மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆடுகள் பெற்ற பயனாளிகள் அனைவரும் ஆடுகளை முறையாக வளர்த்து தங்களை ஒரு தொழில் முனை-வோராக மாற்றிக்-கொண்டு சமுதாயத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.
அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய கணவனை இழந்த பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெண் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்-படுத்தப்படுகிறது.
இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,300 குடும்பங்களை சார்ந்த பெண்கள் பயன்பெறுவர். எனவே இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களை தொழில்முனைவோராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

புதுக்கோட்டை அருகே மறமடக்கியில் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோவில் திடலில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு விழாவுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கலெக்டர் கவிதா ராமு, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் மகேஷ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
அதனை யாரும் பிடிக்கவல்லை. இதையடுத்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க தகுதி வாய்ந்த களத்தில் இறக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டனர். இதில் ஒரு சில காளைகள் தன்னை நெருங்க விடாதவாறு வீரர்களுக்கு போக்கு காட்டி விளையாடியது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள், மஞ்சள் பையுடன் பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை மறமடக்கி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கந்தர்வக்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்ட குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த குருத்தோலை பவனி ஊர்வலத்தை தச்சன்குறிச்சி பங்குத்தந்தை பால்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கந்தர்வகோட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறைவடைந்தது.
பிறகு புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் டிவி சபரிராஜன், சேவியர், அருட்சகோதரிகள் மற்றும் கிறித்தவ பெருமக்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அ ன்டனூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட 2022& 2023 ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணியை ஒன்றிய ஆணையர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
அண்டனூர் ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களில் சாலை வசதி, தெருவிளக்குகள், குடிநீர் தேவை தொடர்பான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறுகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் தொடக்கப்பள்ளி கட்டிடங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அன்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் இளவரசன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பூங்கொடி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
அங்கீகாரம் இல்லாமல் செயல் படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வித் தரத்துடன் உடல்நலம் சார்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களின் உயரம், எடையை கணக்கிட்டு எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.
மாணவர்-களின் பெற்-றோர்களிடத்தில் மாணவர்-களின் உயரம், எடை குறை-வாகவோ, அதிக-மாகவோ இருந்தால் தெரியப்படுத்த வேண்டும். பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளி சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பள்ளி செல்லாத குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.
பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்-திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து ஆண்டு முடிவில் முறையான பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்-கொள்ளவேண்டும். இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையங்களை அதிகப்படுத்திட வேண்டும்.
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.ஐ. பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்-கொள்ளப்படும். மாணவர்கள் காலணி அணிந்து வரும்படி ஆசிரியர்கள் வழியுறுத்த வேண்டும். மாணவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்று-கொடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் உட்பட அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தவிர்க்க முடியாத காரணத்தினால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என தலைவர் மற்றும் துணைத்தலைவர் தெரிவித்தனர்.
இதற்கு அ.தி.மு.க நகர்-மன்ற உறுப்பினர்கள் சேட் என்கிற அப்துல்ரகுமான் தலைமையில் 100 சதவீதம் சொத்துவரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அதே போல் அ.ம.மு.க. உறுப்பினரும் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில் பெரும்பான்மையான உறுப்பினர் தண்ணீர் பிரச்சினை பற்றி பேசினார்கள். இதற்கு துணைதலைவர் பதில் அளிக்கையில் தற்போது உள்ள பிரச்சினையில் 5நாள் அல்லது 10 நாட்களுக்குதான் தண்ணீர் தரம் நிலை உள்ளது.
விரைவில் இப்பிரச்சினை முடிக்கபட்டு இரண்டு தினங்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கும் ஒரு ஆறு மாதமோ, ஒரு வருடமோ ஆகும் என்றார்.
2வது வார்டு உறுப்பினர் மதியழகன் பேசுகையில் வார்டில் எந்த பகுதிக்கு எந்த தண்ணீர் வாழ்வு என தெரியாத காரணத்தினால் மக்களுக்கு சரியாக பதில் கூறமுடியவில்லை. எனவே எந்த பகுதிக்கு எந்த தண்ணீர் வாழ்வு என்பதை உறுப்பினர்களிடம் காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
42வது வார்டு உறுப்பினர் கவிவேந்தன் பேசுகையில் தண்ணீர் பம்ப் ஆப்ரேட்டர்கள் அ.தி.மு.க.வினர் கட்டுபாட்டில் உள்ளனர். இதனால் நான் தி.மு.க உறுப்பினராக இருந்தும் ஆளும் கட்சியில் எந்த செயலையும் செய்யமுடியவில்லை. எனவே பம்ப் ஆப்ரேட்டர்களை மாற்றம் செய்யவேண்டும்.
மேலும் பழைய அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்திற்கு சட்டவிரோதமாக தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்-பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதே போல் 1வது வார்டு, 19வது வார்டு 34வது வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.