என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
வாகனத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு
வாகனத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் புஷ்பம் (வயது 65). இவர் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் பின் பக்கம் அமர்ந்து கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்சேரிக்கு வந்து கொண்டிருந்தார்.
ஆற்றுப்பாலம் அருகே வரும் போது வாகனத்தில் உட்கார்ந்திருந்த புஷ்பம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் பழனிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story