என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
ஆலங்குடி ஒழுங்கு-முறை விற்பனைக்-கூடம் மூலம் 300 மெ.டன் உளுந்து கொள் முதல்
ஆலங்குடி ஒழுங்கு-முறை விற்பனைக்-கூடத்தின் மூலம் 300 மெ.டன் உளுந்து கொள்-முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்-கூடத்தின் மூலம் 300 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.63.00- என்ற விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்படும். உளுந்து கொள்முதல் வரும் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் உளுந்துக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தமிழ்நாடு உளுந்து விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த உளுந்து கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, ஆலங்குடி விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், திருவரங்குளம் உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Next Story






