என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படிகட்டு உடைந்த நிலையில் பஸ்
    X
    படிகட்டு உடைந்த நிலையில் பஸ்

    அரசுபஸ் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் அவதி

    அரசுபஸ் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் அவதியடைந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையிலிருந்து துவார் செல்லும் 12 ஏ அரசு பஸ் புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு இச்சடி, வடவாளம், சம்பட்டிவிடுதி, மழையூர், துவார் வரை சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சென்று வருகிறது. 

    இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ&மாணவிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை அந்த பஸ்சின் படிக்கட்டு திடீரென உடைந்தது. 

    இதனால் பயணிகள் அவதியடைந்தனர். மேலும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    Next Story
    ×