search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலத்தில் குப்பை அரைக்கும் கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    தாரமங்கலத்தில் குப்பை அரைக்கும் கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    • தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு இந்த குப்பைகள் மலைப்போல் தேங்கி சுகாதார விளைவுகளை ஏற்படுத்தி வந்ததால் அந்த பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்பாய நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வந்த நிலையில் நீதிமன்றம் குப்பை கிடங்கை உடனடியாக நகராட்சி நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நீதிமன்றம் தீர்ப்பின் படி கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பல இடங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் கிடங்கு அமைப்பது என்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    இதையரிந்த 10,20-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியும், போராட்டம் நடத்தியும் வந்த நிலையில் ஒப்பந்ததாரர் அருள்லட்சுமி நிறுவனத்தினர் பணியை தொடக்க பூமி பூஜை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    நகராட்சிக்கு உட்பட்ட 10,20-வது வார்டு கிழக்குப்பாவடி பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி, விசைத்தறி ஜவுளி தொழில் செய்து வருகிறோம்.இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அரசு ஆரம்ப துணை சுகாதார மருத்துவ மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,இதனை ஒட்டி விவசாய மற்றும் வேளாண் தோட்டக்கலை அலுவலகமும், தனியார் ஜவுளி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரிந்தும் வருகின்றனர்.

    இதற்கும் மேலாக இந்த குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தை ஒட்டி எங்கள் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய குறுக்குபட்டி ஏரி அமைந்துள்ளது.இந்த இடத்தில் கிடங்கு அமைவதால் ஏரி நீர்நிலை, கிணற்று நீர், ஆழ்துளை நீர் மாசுபாடு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் பரிசிலனை செய்ய வேண்டும் இல்லை யேல் அடுத்தகட்ட போராட் டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதனை தொடந்து அனைத்து பொதுமக்களும் நகராட்சி அலுவலகம் சென்று தங்களது கோரிக் கையை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குப்பை கிடங்கு அமைக்கபடுவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×