என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருத்துறைப்பூண்டியில், தனியார் வேலைவாய்ப்பு முகாம்
  X

  முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் வழங்கினார்.

  திருத்துறைப்பூண்டியில், தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர்.
  • 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

  திருத்துறைப்பூண்டி:

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நகர தி.மு.க. சார்பில் திருத்துறைப்பூண்டியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

  முகாமை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  இதில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ஞானி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சிக்கந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  முகாமில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர். இதில் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

  முகாமில் 68 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

  Next Story
  ×